For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிமாச்சல பிரதேச தேர்தல்: 15 கிமீ நடந்தே சென்ற தேர்தல் அதிகாரிகள்.. பாராட்டி ஆனந்த் மகிந்திரா ட்வீட்

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த தேர்தலின் போது 12 ஆயிரம் கி.மீ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்காக 15 கி.மீ தூரம் தேர்தல் அதிகாரிகள் நடந்தே சென்றதை பாராட்டி புகைபடத்துடன் ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

மகிந்திரா குழுமங்களின் தலைவராக இருக்கும் இவரது ட்விட்களுக்கே தனி ரசிகர் பட்டாளம் இணையத்தில் இருக்கிது.

 ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விகள் இணையத்தில் பிரபலம். சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திரா, தனது ட்விட் பக்கத்தில் தனக்கு கிடைக்கும் சுவாரசியமான தகவல்கள், துணுக்குகள், தன்னம்பிக்கையூட்டும் நபர்களின் கதைகள், வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஹிட் அடித்து வரும் என்று கூட சொல்லலாம்.

பாராட்டி ட்விட்

பாராட்டி ட்விட்

அந்த வகையில் இமாச்சல பிரதேச தேர்தலில் தேர்தல் அதிகாரிகளின் அளப்பரிய பணியை பாராட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இமாசல பிரதேசத்தில் 12 ஆயிம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக பனியில் 15 கி.மீட்டர் தொலைவுக்கு மலையில் ஏறி செல்கின்றனர். நமது ஜனநாயகம் செயல்படுவதை காட்டுவதற்கு வார்த்தைகளை விட இது போன்ற படங்கள் சிறப்பானவை" என்று பதிவிட்டுள்ளார்.

சல்யூட் செய்வதாக..

சல்யூட் செய்வதாக..

ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வாக்குச்சாவடி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், தேர்தல் அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் பெருமை அளிப்பதாகவும் சல்யூட் செய்வதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

74 சதவீத வாக்குகள்

74 சதவீத வாக்குகள்

68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச சட்டமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 74 சதவீத வாக்குகள் இந்த தேர்தலில் பதிவானது. மலைப்பிரதேச மாநிலமான இமாசல பிரதேசத்தில் பல்வேறு சவால்களையும் கடந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குச்சாவடிகளை அமைத்து இருந்தனர். ஒருவாக்காளர்கள் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இத்தகைய பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

சுமார் 6 மணி நேரம் நடந்து

சுமார் 6 மணி நேரம் நடந்து

குறிப்பாக சம்பா மாவட்டத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்து இருந்த ஷசக் படோரி வாக்குப்பதிவு நிலையத்திற்கு பனி படர்ந்த மலையில் ஏறி வாக்குச்சாவடி அதிகாரிகள் சென்றனர். 15 கி.மீட்டர் தொலைவுக்கு நடந்தே தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்கு சென்றனர். சுமார் 6 மணி நேரம் நடந்து சென்று வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சென்ற காட்சிகள் நேற்றே அதிகம் பகிரப்பட்டு இருந்தது.

English summary
Anand Mahindra has released a photo praising the election officials who walked 15 km to the polling station which was set up at an altitude of 12 thousand km during the election held yesterday in Himachal Pradesh. Now this photo is going trend on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X