இமாச்சல பிரதேசம்: வரிந்து கட்டும் அதிருப்தி வேட்பாளர்களால் தலையிலடித்துக் கொள்ளும் பாஜக, காங்கிரஸ்!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் மீண்டும் ஆட்சியை அமைத்தது கிடையாது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் களத்தில் உள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் விவகாரம் பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு சீட் தரவில்லை. இவர்கள் அனைவருமே இப்போது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதிருப்தி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலும் செய்துள்ளனர். இதே நிலைமைதான் காங்கிரசிலும் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள். இதனால் அதிருப்தி வேட்பாளர்ளின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைப்பதில் இரு கட்சி மேலிடமும் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதிருப்தியாளர்களிடம் இருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை.
பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த மாநிலத்திலேயே உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண முடியாது இருப்பது பாஜக சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் பிரதமர் மோடியின் செல்வாக்கு, பிரதமர் மோடி தொடங்கி வைத்த அடிக்கல் நாட்டிய நலத் திட்டங்கள் தங்களுக்கு கை கொடுத்துவிடும் என நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறதாம் பாஜக.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications