மேக்கப் மட்டும் இல்லைனா.. கங்கனா ரனாவத் எப்படி இருப்பார் தெரியுமா? காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை
சிம்லா: ‛மேக்கப் மட்டும் இல்லைனா..'' என நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பற்றி இமாச்சல பிரதேச மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நெகி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் கடும் மழையால் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, வெள்ளம் சூழ்ந்தது.

இந்த மழையின் காரணமாக மொத்தம் 153 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்தனர். இந்த கனமழையின் காரணமாக மொத்தம் 1,291 கோடி வரை இமாச்சல பிரதேச அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்டி லோக்சபா தொகுதியின் எம்பியான நடிகை கங்கனா ரனாவத் தனது தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கங்கனா ரனாவத் 537,022 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் 4,62,267 ஓட்டுகள் பெற்றார். இதனால் கங்கனா ரனாவத் 74,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் கங்கனா ரனாவத் தனது தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அதுதொடர்பான போட்டோக்களை தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தான் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நேகி மழை வெள்ளம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கங்கனா ரனாவத் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்கனா ரனாவத் மேக்கப் இன்றி வந்தால் பொதுமக்களால் அது கங்கனா ரனாவத்தா? இல்லாவிட்டால் அவரது அம்மாவா என்பது தெரியாது? என தெரிவித்து இருப்பது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக ஜெகத் சிங் நேகி கூறியதாவது:
‛‛மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு அவர் (கங்கனா ரனாவத்) இமாச்சல பிரதேசத்துக்கு வந்துள்ளார். மாநிலத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தபோதோ, மாண்டி தொகுதியில் 9 பேர் பலியானபோதோ அவர் வரவில்லை. அப்போதெல்லாம் அவர் மாநிலத்துக்கு வர விரும்பவில்லை. மழை பெய்யும்போது வந்தால் மேக்கப் கரைந்துவிடும் என நினைத்து அவர் வராமல் இருந்து இருக்கலாம்.
மேக்கப் இல்லாமல் வந்தால் அது கங்கனா ரனாவத்தா? இல்லை அவரது தாயா? என்பதை கண்டுப்பிடிக்க முடியாது. தற்போது நிலைமை சரியான பிறகு வந்து முதலை கண்ணீர் வடிக்கிறார்'' என கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நேகியின் இந்த பேச்சு தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இவரது பேச்சுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications