இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது.
68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக 25 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வரை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேச காங்கிரஸில் 7 பெருந்தலைகள் முதல்வர் பதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இமாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் அங்கு செல்வாக்குமிக்க தலைவர் .அவரது மனைவி பிரதிபா சிங், எம்.பி.யாக உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடாத போதும் முதல்வர் யார் என்ற பட்டியலில் அவரது பெயரும் அடிபடுகிறது. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான வீரபத்ர சிங் கோஷ்டிக்கு எதிரான சுக்விந்தர் சுகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர்.
வீரபத்ரசிங் குடும்ப விசுவாசியான சீனியர் மோஸ்ட் தலைவர் தாகுர் கவுல் சிங், ராஜவம்சத்தைச் சேர்ந்த ஆஷா குமார் உள்ளிட்ட மொத்தம் 7 தலைவர்களின் பெயர்கள், முதல்வர் பதவிக்கான பட்டியலில் உள்ளது இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளரான சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், கட்சி மேலிடம்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications