Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாச்சலில் வெற்றி பெற்ற 3 சுயேச்சைகள்.. கிங் மேக்கராக மாற வாய்ப்பு? காரணம் ‛ஆபரேஷன் தாமரை’ அச்சம்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதில் 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஆபரேஷன் தாமரை அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் வெற்றி பெற்ற 3 சுயேச்சைகளும் கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் கருத்து கணிப்புகள் கூறியது போல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மொத்தம் 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். ஆம்ஆத்மி கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

யார் இந்த சுயேச்சைகள்?

யார் இந்த சுயேச்சைகள்?

இந்நிலையில் தான் இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாநிலத்தில் சுயேச்சைகளாக வெற்றி பெற்ற 3 பேரில் 2 பேர் பாஜக கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் என்பதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பாஜகவில் வெளியேற்றப்பட்ட கேஎல் தாகூர் வெற்றி

பாஜகவில் வெளியேற்றப்பட்ட கேஎல் தாகூர் வெற்றி

அதன்படி தற்போதைய சூழலில் பாஜகவில் இருந்து வெளியேறிய கேஎல் தாகூர் நால்கார்க் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். தற்போது இவர் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவாவை விட 13,264 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக லாக்விண்டர் சிங் ரானா களமிறங்கி இருந்தார். இவர் கடந்த 2017 தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸில் இருந்து போட்டியிட்டு எம்எல்ஏவானார். இவர் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேஎல் தாகூரை வீழ்த்தி இருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸில் இருந்த லாக்விண்டர் சிங் ரானா பாஜகவில் இணைந்து மீண்டும் போட்டியிட்டார். லாக்விண்டர் சிங்கிற்கு பாஜக சீட் வழங்கிய பாஜக கேஎல் தாகூருக்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் கேஎல் தாகூர் சுயேச்சையாக களமிறங்கி தற்போது வெற்றி பெற உள்ளார். கேஎல் தாகூர் கடந்த 2012 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக அதிருப்தியாளர் முன்னிலை

பாஜக அதிருப்தியாளர் முன்னிலை

இதேலேபால் டேரா சட்டசபை தேர்தலில் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹாஸ்யார் சிங் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளரான டாக்டர் ராஜேஷ் சிங்கை விட வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஹாஸ்யார் சிங் கடந்த முறை இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது பாஜகவில் அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் சுயேச்சையாக களமிறங்கி வாகை சூடியுள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தியாளர் வெற்றி

காங்கிரஸ் அதிருப்தியாளர் வெற்றி

மேலும் காங்கிரஸ் கட்சியில் சீட் மறுக்கப்பட்டதால் வெளியேறிய அசிஷ் சர்மா சுயேச்சையாக ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பிந்தர் சர்மாவை விட வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். இவ்வாறாக 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்னளர்.

கிங்மேக்கராக மாற வாய்ப்பு

கிங்மேக்கராக மாற வாய்ப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஆபரேஷன் தாமரை மூலம் பாஜக எம்எல்ஏக்களை இழுக்கலாம் என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை ராஜஸ்தான், சத்தீஸ்கர் அழைத்து செல்ல உள்ளது. ஒருவேளை ஆபரேஷன் தாமரை நடந்தால் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பது காங்கிரஸ், பாஜக கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கம். இதனால் இவர்கள் 3 பேரும் கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது. இதனால் இவர்களை வளைத்து போட காங்கிரஸ், பாஜக கட்சிகள் வியூகம் வகுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+