நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவிக்காலத்தில், நிலக்கரி இலாகாவையும் சில ஆண்டுகள் கவனித்து வந்ததால் நிலக்கரி சுரங்க ஊழலில் அவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஊழலில் அவருக்கு தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார் ஏற்கவில்லை. ஊழலின் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கடந்த மாதம் 16-ந் தேதி அவர் உத்தரவிட்டார்.
அதன்படி மன்மோகன்சிங்கிடம் அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு, ஹிண்டால்கோ என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இவ்விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதி கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுபற்றி மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
வரும் 27-ந் தேதிக்குள் விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், அதற்கு முன்பாக இந்த விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டதாக தெரிகிறது.
ஆனால், இத்தகைய விசாரணை எதுவும் நடக்கவில்லை என்று மன்மோகன்சிங்கின் உதவியாளர் மறுத்துள்ளார். சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் காஞ்சன் பிரசாத்திடம் கேட்டபோது, அவர் இதை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ மறுத்துவிட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications