மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம்- புதிய தேசிய கொள்கையின் நிஜமுகம் அம்பலம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கை திட்டத்தில் 3-வது மொழியாக இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மொழி திணிப்புக்கான கருவிதான் என்கிற தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு நியாயமானது என்பதை உறுதி செய்துள்ளது மகாராஷ்டிரா.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்தே தமிழ்நாடு, இந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் வீரம் செறிந்த ஜனநாயக அறவழிப் போரை நடத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் உயிரத் தியாகம் செய்துள்ளனர்.

மத்திய அரசின் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக இந்தி மொழி திணிக்கப்பட்டது அந்த காலம். தற்போது, புதிய கல்வி கொள்கை- மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் பெயரால் தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.
வட இந்திய மாநிலங்களில் இப்படி இந்தி மொழி திணிக்கப்பட்டதால் பீகார், ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநில மக்களின் தாய்மொழி அழிக்கப்பட்டு அந்த இடத்தை இந்தி கைபற்றி இருக்கிறது என்பதையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பட்டியலிட்டு அம்பலப்படுத்தி இருந்தனர்.
ஆனாலும் பாஜக தரப்பில், 3-வது மொழியாக இந்தியை படிக்கலாமே என்றனர். இதற்கும் இந்தி படிக்கவே கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை; 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்தி பிரசார சபா இயங்குகிறதே எனவும் தமிழக கட்சிகள் சுட்டிக்காட்டி வந்தன.
தற்போது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அச்சமும் எதிர்ப்பும் நியாயம்தான் என்பதை மகாராஷ்டிரா செய்தி உறுதிப்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை- மும்மொழிக் கொள்கையின் கீழ் 3-வது மொழியாக இந்தி மொழி பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் இந்த செய்தி. தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை இதே பாணியில் திணித்து கட்டாயமாக்கலாம் என்ற மத்திய அரசின் உண்மை முகம் மகாராஷ்டிரா மூலம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.
In Maharashtra, under the BJP-led central government's new National Education Policy, making Hindi a mandatory third language as part of the three-language formula has sparked major controversy.












Click it and Unblock the Notifications