இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ‛‛இந்தி தேசிய மொழியா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவாதம் சற்று முடிவடைந்த நிலையில் தான் கன்னட நடிகர் கிச்சா சுதீப், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இடையே இந்தி மொழி தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள் டுவிட்டர் வழியே நடந்தது.

மீண்டும் துவங்கிய விவாதம்

மீண்டும் துவங்கிய விவாதம்

இதனால் இந்தி தேசிய மொழியா? என்ற விவாதம் துவங்கியது. அதாவது இந்தி தேசியமொழி இல்லை என கிச்சா சுதீப் தெரிவித்ததை குறிப்பிட்டு அஜய் தேவ்கன் இந்தி மொழியில், ‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி

சுதீப் பதிலடி

இதற்கு கிச்சா சதீப், "சார் எனது பேச்சின் பொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இதுபற்றி நேரில் சந்திக்கும் போது உங்களுக்கு விளக்குகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி கருத்து

மம்தா பானர்ஜி கருத்து

இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முதலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களிடம் கருத்து கேட்பு

மக்களிடம் கருத்து கேட்பு

‛‛இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் தான் கருத்து கேட்க வேண்டும். ஏனென்றால் நமது நாடு பல்வேறு மொழி, கலாசாரங்களை கொண்டது. இதனால் இதுபற்றி நான் எதுவும் இப்போது கூறப்போவது இல்லை. இதுபற்றி பிற மாநில முதல்வர்களோடு விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் கருத்து பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது அவசியம். அதன்பிறகு ஒரு கூட்டு முடிவு எடுக்கலாம்'' என்றார்.

உத்தரபிரதேசம், ஹரியானா

உத்தரபிரதேசம், ஹரியானா

மேற்கு வங்கத்தில் மட்டும் ஆட்சியில் உள்ள மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக இந்தியாவின் பிற இடங்களுக்கும் கட்சியை விரிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். கோவா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் உள்ளன. உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இந்தி மொழி முக்கியமானது என்ற நிலையில் அவர் இத்தகைய பதிலை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+