"கான்" தான் காரணம்.. ஆர்யனுக்கு எதிரான நடவடிக்கை.. சந்தேகம் கிளப்பும் மெகபூபா முப்தி.. பகீர் புகார்
மெகபூபா முப்தி ஆர்யன் கான் கைது விவகாரம் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
ஜம்மு: போதைப்பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கை குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த ஒரு வார காலமாகவே, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழக்கில் கைதாகி உள்ளஆர்யன் கான் சிறையில் உள்ளார்... ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து, அது நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது.

விசாரணை
இந்த வழக்கில் தன்னை வேண்டுமென்றே அதிகாரிகள் தொடர்புபடுத்தி உள்ளதாகவும், அதனால், தன்னுடைய தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஆர்யன் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது... மற்றொரு பக்கம், இந்த வழக்கு இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது...

ட்வீட்
இதையடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.. இப்படி ஒரு உத்தரவு வந்துள்ள நிலையில், இன்றைய தினமே காஷ்மீரின் மெகபூபா முப்தி இது தொடர்பாக ஒரு புது சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், போதைப்பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கை குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

ஆர்யன்கான்
லக்கிம்பூரில் காரை ஏற்றி கொண்ட பாஜக எம்பி மகன் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு பதிலாக, 23 வயதே நிரம்பிய ஆர்யன் கான் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. காரணம், ஆர்யன் கான் என்ற பெயர்தான்.. வரப்போகும் தேர்லில் வாக்கு வங்கியை பலப்படுத்தி கொள்ளவே, பாஜக இப்படி இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாஜக
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் பாஜகவின் சூழ்ச்சி உள்ளது என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருந்தார்.. ஆர்யன் கானின் கைது போலியானது, என்சிபியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அடுத்த இலக்கு ஷாருக்கான்தான் என்று கூறி பெரும் சர்ச்சையை அவர் ஏற்படுத்தியிருந்தார். அதற்கு ஆதாரமாகவும் 2 வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார்.

வீடியோ
ஆர்யன் கான் பயணித்த கப்பலை என்சிபி சோதனை செய்தபோது மும்பையில் உள்ள என்சிபி ஆபீசுக்குள் பாஜகவை சேர்ந்த மனிஷ் பனுசாலி, தனியார் டிடெக்டிவ் கிரண் பி கோஸ்வாமி நுழைவது போன்ற ஒரு வீடியோ, என்சிபி அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வந்து அவர்கள் காரில் ஏறி கிளம்பும் மற்றொரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, அடுத்த சந்தேகத்தை மெகபூபா தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.

விளக்கம்
முன்னதாக, போதைப்பொருள் சோதனை வழக்கு அரசியல் தொடர்புடையது, மதம் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மறுத்திருந்தது.. இது தொடர்பாக மும்பை மண்டல என்சிபி இயக்குனர் சமீர் வான்கடே சொல்லும்போது, இது முற்றிலும் ஆதாரமற்றது.. நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் மதத்தையும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை தொழில் ரீதியாக செய்கிறோம்" என்று விளக்கம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications