கேரளாவில் 28ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தேர்வுகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கனமழையால் கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கனமழையால் கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு பிற மாநிலங்களில் இருந்து செல்லும் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications