பச்சை படுகொலை.. 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை.. காஷ்மீர் பண்டிட்களுக்கு "குறி".. அமித்ஷா அவசர ஆலோசனை
அமித்ஷா தலைமையில் இன்று காஷ்மீரில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடக்கிறது
ஜம்மு: காஷ்மீரில் ஒரு செங்கல் சூளையில், வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள்மீது திடீர் துப்பாக்கிசூடு நடத்தியதில், 17 வயது சிறுவன் பரிதாபமாக சுருண்டு இறந்துள்ளான்.. இப்படி, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தவும், அது குறித்து விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமையில் இன்றைய தினம் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் காஷ்மீரில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் தொடர் கதையாகி வருகிறது.- ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், நாளுக்கு நாள் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் தொடருகிறது..
அதிலும் பண்டிட்டுகளை குறி வைத்து பயங்கரவாதிகள் இந்த தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதேபோல, ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் உள்ள இந்துக்களையும் பயங்கரவாதிகள் அட்டாக் செய்து வருவது அதிகரித்து வருகிறது

பண்டிட்டுகள்
கடந்த மே 1ம் தேதி முதல் மட்டும் காஷ்மீரில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்... அவர்களில் 3 பேர் போலீசார் மற்றும் 5 பேர் பொதுமக்கள் ஆவர். கடந்த மே 12ல் புத்காம் மாவட்டத்தின் தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற எழுத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்... 3 நாட்களுக்கு முன்பு, குல்காம் மாவட்டத்தின் கோபால்போராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்..

விஜய்குமார்
காஷ்மீரின் எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக இருந்தவர் பெயர் விஜய்குமார். இவரையும் நேற்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துவிட்டனர். இப்படி நடந்து வரும் தொடர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சொந்தக்கட்சியில் இருந்து கொண்டு, சேம்சைட் கோல் போட்டு வரும், சுப்பிரமணியன் சுவாமியும் இதே கோரிக்கையையும் விடுத்துள்ளார்..

சுப்பிரமணியசாமி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும் காஷ்மீர் இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவதற்கு தேவை இருக்கிறது. கொஞ்ச காலமாகவே, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதால் அமித்ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று கிண்டலாக விமர்சித்திருந்தார்.

இன்று ஆலோசனை
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்றைய தினம் ஆலோசனையில் ஈடுபட்டார்... எனினும் இது வழக்கமான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்றே சொல்லப்பட்டாலும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க இன்று அதாவது ஜுன் 3-ம் தேதி உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அமித் ஷா தலைமை தாங்குகிறார்.

ஆலோசனை
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் படுகொலை சம்பவங்கள் தொடரும் நிலையில், நடைபெறும் 2வது முக்கிய ஆலோசனை கூட்டம் என்பதால், மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கு எடுக்கப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிட்கள்
ஜம்மு - காஷ்மீரில் தொடர்ச்சியாக காஷ்மீர் பண்டிட்டுகள் சுட்டுக் கொல்லப்படுவது, அந்த சமுகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய தினம் காஷ்மீரில், 4,000க்கும் மேற்பட்ட பண்டிட் சமூகத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர். இவர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால், இங்கிருந்து வெளியேறுவோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.. இதையடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் வசிக்கும் முகாம்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும், இன்றைய தினம் அமித்ஷா மேற்கொள்ள போகும் ஆலோசனை ஆறுதல் தீர்வை பெற்று தரும் என்றே நம்பப்படுகிறது.

17வயது சிறுவன்
இதனிடையே, இன்னொரு படுகொலை தற்போது நடந்துள்ளது.. காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர்... அந்த செங்கல் சூளைக்குள் நேற்றிரவு 9 மணியளவில் துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் சென்றுள்ளனர்.. பிறகு அங்கு வேலைசெய்துகொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பீகாரை சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் பரிதாபமாக சுருண்டு உயிரிழந்தான்..

ரத்த வெள்ளம்
பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்ற மற்றொரு தொழிலாளி ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்தார்.. இந்த துப்பாக்கி சூடு குறித்த தகவலறிந்த பாதுகாப்பு படையினர், படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இதனிடையே, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.. நேற்றிரவுவரை தொடர்ந்து துப்பாக்கிசூடு அங்கு நடைபெற்றுவரும் நிலையில்தான், இந்த தாக்குதல்களை எல்லாம் நிறுத்த அமித்ஷா ஆலோசனை நடத்த போகிறார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications