"கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நீதியை மோடி அரசு பெற்றுத் தரும்"..ஒரு மாவீரரின் தந்தை
-ரிச்சா பாஜ்பாய்
கார்கில்: பாகிஸ்தான் ஆக்கிரமித்த கார்கிலை மீட்பதற்காக போரிட்டு வீரமரணடைந்த இந்திய வீரர்களுக்கான நீதியை தற்போதைய மோடி அரசாவது பெற்றுத் தரும் என நம்புவதாக மாவீரர் கேப்டன் விஜயந்த் தாப்பரின் தந்தை கர்னல் தாப்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கார்கில் போரின் வெற்றித் திருநாளான ஜூலை 26-ந் தேதியன்று ஆண்டு தோறும் தனது மகன் தேசத்துக்காக வீரமரணம் எய்திய கார்கில் பகுதிக்கு சென்று வீரவணக்கம் செலுத்தி வருகிறார் கர்னல் தாப்பர். இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர் கர்னல் தாப்பர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பயன்படுத்திய முதன்மையான டாங்கியின் பெயர் விஜயந்தா. இது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதன் நினைவாகத்தான் மகனுக்கு விஜயந்த் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கர்னல் தாப்பர்.

தமது மகனின் தியாகம் பற்றி..
"என் மகனுக்கு 22 வயதுதான் ஆகி இருந்தது.. அந்த இளம்வயதிலேயே தேசத்துக்காக தன் உயிரை தியாகம் செய்தான். தாய்நாட்டுக்காக அவன் உயிரை தியாகம் செய்ததை பெருமையாகவே கருதுகிறேன்.. நான் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மாவீரனின் தந்தை என்று உணரும் தருணம் மிகவும் கவுரவமானது.. பெருமையானது" என்கிறார் கர்னல் தாப்பர்.

நாட்டின் ராணுவம் குறித்து..
நமது நாட்டின் ராணுவ கட்டமைப்பு பற்றி கர்னல் தாப்பர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைமைதான் இப்போதும் இருக்கிறது.. ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டிய உடனடி தேவை இருக்கிறது. 30 ஆண்டுகள் பழமையான.. அதே போபர்ஸ் பீரங்கிகளைத்தான் இன்னமும் நாம் பயன்படுத்துகிறோம். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தளவாடங்கள்தான் நமக்கு அவசியம்" என்கிறார்.

பாகிஸ்தான்...
"பாகிஸ்தானில் பல அதிகார மையங்கள் இருக்கின்றன.. இந்த நிலைமை ஒருபோதும் மாறப்போவதில்லை.. இதனாலேயே யுத்த நிறுத்த மீறல்கள் நிகழ்கின்றன.. யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகிற போதெல்லாம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாதவாறு நமது இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பற்றி கூறுகிறார் கர்னல் தாப்பர்.

தற்போதைய அரசு..
இந்த பேட்டியின் முடிவாக, பாகிஸ்தானால் படுகொலை செய்யப்பட்ட கேப்டன் சவுரவ் காலியா உள்ளிட்ட ஜவான்களின் மரணத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.. அதை போர்க்குற்ற நடவடிக்கையாக எழுப்ப வேண்டும் என்கிறார் கர்னல் தாப்பர்.

சவுரவ் காலியா
கார்கில் போரின் தொடக்கத்தில் கேப்டன் சவுரவ் காலியா உட்பட 5 ராணுவ வீரர்களை கைது செய்த பாகிஸ்தான் அவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications