Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூரில் காங்கிரஸ் போட்ட பிளான்.. முந்திக்கொண்ட பிரேன் சிங்.. ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், நாளை தொடங்க இருந்த மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் குமார் பல்லா ரத்து செய்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 10 ஆம் தேதி) தொடங்க இருந்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (பிப்ரவரி 9) அறிவித்ததால், மணிப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Hours after Biren Singh stepped aside as Manipur CM Governor calls off Assembly session

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள், பாஜக மாநிலத் தலைவர் ஏ.ஷர்தா ஆகியோருடன் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை அவரது மாளிகையில் நேற்று மாலை சந்தித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், தமது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தார். மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில், மாநில முதல்வர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று தொடங்க இருந்த மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. மேலும் முதல்வர் பிரேன் சிங் தலைமையின் மீது ஆளும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலருக்கு அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பிரேன் சிங் முடிவெடுத்தார்.

கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நேற்று மணிப்பூர் திரும்பியதுமே பிரேன் சிங் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் ரத்து

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று நடைபெற இருந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் அஜய் குமார் பல்லா அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டும் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்திய அரசியலமைப்பின் பிரிவு 174 இன் பிரிவு (1) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 12வது மணிப்பூர் சட்டமன்றத்தின் 7வது கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முந்தைய உத்தரவு, இன்னும் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக செல்லாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை

கடந்த 2023 மே மாதம், மணிப்பூர் மாநிலத்தின் பூர்வ குடிகளான மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வெடித்த வன்முறை போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 60 ஆயிரத்தும் மேலானவர்கள் தங்களது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையேயான கலவரத்தை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தூண்டியதாக குக்கி இனத்தவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரேன் சிங் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+