Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மாநிலங்களில் கைவரிசை காட்டிய கும்பல்.. கூகுள் மேப்ஸ் மூலம் வீடுகளை தேர்வு செய்தது எப்படி! பகீர்

Subscribe to Oneindia Tamil

ஜாம்ஷெட்பூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெகா கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மேப்ஸ் மூலம் கண்காணித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், 3 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது. 3 மாநில போலீஸ் கண்களில் மண்ணை போட்டுவிட்டு இந்த கும்பல் எப்படித் தொடர் திருட்டில் ஈடுபட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

இந்த நவீன காலத்தில் டிஜிட்டல் வளர்ச்சியால் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டன. அதேநேரம் திருடர்களும் கூட இந்த டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி நூதன முறையில் திருட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியொரு சம்பவம் தான் ஜார்கண்ட்டில் நடந்துள்ளது.

How a Bihar Gang Used Google Maps to Scout House Before Burglary Worth Lakhs across three states

கூகுள் மேப்ஸ்

அங்குக் கும்பல் ஒன்று கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி, வீடுகளைக் குறிவைத்துத் திருடியுள்ளனர். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் அவர்கள் இதுபோல தங்கள் கைவரிசையைக் காட்டவில்லை. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் என 3 மாநிலங்களில் இப்படித் திருடியுள்ளனர். மொத்தம் ஆறு வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். இந்தத் தகவலைக் கிழக்கு சிங்பூம் எஸ்எஸ்பி பியூஷ் பாண்டே உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "3 மாநிலங்களுக்கும் இடையே இவர்கள் சுத்தி கொண்டே இருப்பார்கள். கூகுள் மேப்ஸ் மூலமாகவே இவர்கள் வீடுகளைத் தேர்வு செய்துள்ளனர். ஒரு வீட்டில் உள்ளே புகுந்து கொள்ளை அடித்த உடனேயே அந்த ஊரை விட்டுத் தப்பிச் செல்வார்கள். உடனடியாக இவர்கள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிடுவார்கள். இதுவே அவர்களின் பேட்டர்னாக இருந்துள்ளது" என்றார்.

கும்பல் கைவரிசை

கடந்த செப்டம்பர் 19ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோல்மூரியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் அப்படித் தான் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் ரிஷப் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் புகார் இவர்களைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாகத் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப உதவி மற்றும் உளவுத் தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

கைது

தீவிர விசாரணைக்குப் பிறகு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விகாஸ் குமார் (27), ராஜு குமார் (49) மற்றும் முகமது இர்ஃபான் (26) என அடையாளம் காணப்பட்டனர். பீகாரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், திட்டம் போட்டுத் திருடி வந்துள்ளனர். இவர்களுக்கு வேறு யாராவது உதவு செய்தனரா.. வேறு கூட்டாளிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களிடம் இருந்து இருந்து ஒரு துப்பாக்கி, இரண்டு 8 மிமீ தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டெடுத்துள்ளனர். திருட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டன. அவர்கள் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எப்படி

இந்த கும்பல் கூகுள் மேப்ஸ் மூலமாகவே தங்கள் இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் கண்டனர். பொதுவாக ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கப் போகும் கும்பல்.. அந்தப் பகுதியை நோட்டமிடும். நோட்டமிட்டு வீட்டைத் தேர்வு செய்யும் வேலையையே கூகுள் மேப்ஸ் மூலம் செய்துள்ளனர். மேப்ஸின் செயற்கைக்கோள் படங்களை வைத்து எந்த ஏரியாவில் கொள்ளை அடிக்கலாம் என்பதை முடிவு செய்வார்களாம். ஏரியாவை முடிவு செய்தவுடன் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் அந்த ஏரியாவை டிஜிட்டல் முறையில் நோட்டமிடுவார்களாம். இதன் மூலம் பல நூறு கிமீ தொலைவிலிருந்தே வீடுகளைக் கண்காணிக்க முடியும்.

வீடுகளை ஜூம் செய்து, அதில் இருக்கும் தனியாக இருக்கும் வீடுகளைக் கண்டுபிடிப்பார்களாம். அடுத்து எந்த வீடுகளில் தாழ்வான சுற்றுச்சுவர்கள் உள்ளன.. எங்கு எளிதாகத் தப்பிச் செல்லும் மொட்டை மாடிகள், பால்கனிகள் உள்ளன என்பதைக் கூட டிஜிட்டல் முறையிலேயே உறுதி செய்துவிடுவார்களாம். இப்படி எல்லாவற்றையும் டிஜிட்டல் முறையிலேயே செய்யும் அந்தக் கும்பல் நேரில் நோட்டமிட ஓரிரு முறை மட்டுமே வருமாம். இதனால் யாருக்கும் சந்தேகம் வராது. கொள்ளை அடித்தவுடனேயே தப்பிவிடுவார்கள் என்பதால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+