அயோத்தி ராமர் கோவில் விழாவை புறக்கணித்த சோனியா, கார்கே.. பாஜக வலையில் சிக்கிய காங்கிரஸ்.. எப்படி?
அயோத்தி: அழைப்பு விடுத்தாலும் கூட அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019ம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. தற்போது கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கு முன்பு ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின்போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என தொடர்ந்து பாஜக தெரிவித்து வந்தது.
தற்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுவதன் மூலம் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் 3 பேரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கமாட்டார்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஆர்எஸ்எஸ், பாஜக அயோத்தி ராமர் கோவில் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. கோவில் முழுவதுமாக கட்டி முடிக்காத நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் அதனை அவசரமாக திறக்கிறது. இதனால் ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சியின் அழைப்பை நிராகரித்துள்ளனர்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்ததன் மூலம் பாஜக விரித்த வலையில் காங்கிரஸ் கட்சி வசமாக சிக்கி உள்ளது. அதாவது அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் பாஜக தொடர்ந்து உறுதியாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் இருமனநிலையுடன் இருந்தது. ராமர் கோவில் விஷயத்தில் உறுதியாக இருந்தால் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் வாக்குவங்கி தங்களை விட்டு சென்றுவிடும் என காங்கிரஸ் நினைத்தது தான் இந்த இருமனநிலைக்கான காரணம்.
இந்நிலையில் தான் பாஜகவினர் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கி உள்ளனர். அதாவது விழாவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றால் அது அவர்களின் ஓட்டு வங்கியாக உள்ள சிறுபான்மையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும். மாறாக பங்கேற்காவிட்டால் இந்து மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி இருப்பதை வெளியே கூறலாம் என பாஜக திட்டமிட்டு இருந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சி விழாவை புறக்கணித்து இருப்பதன் மூலம் பாஜக புதிய பிரசாரத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது. அழைப்பு விடுத்தும் கூட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளதை மக்களிடம் எடுத்து கூற உள்ளனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கலாம்.
ஏற்கனவே நடந்து முடிந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோராம் ஆகிய சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் மட்டுமே வெற்றி பெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால் ரிசல்ட் என்பது அப்படியே மாறிப்போனது.
இதற்கு முக்கிய காரணம் என்பது பாஜக முன்னெடுத்த பிரசாரம் தான். அதாவது சென்னையில் அமைசசர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா, சிக்குன் குனியா உள்ளிட்ட நோயை அழிக்க முடியாது. ஒழிக்க தான் வேண்டும். அதுபோல் தான் சனாதனம் என பேசியிருந்தார். திமுக, காங்கிரஸ் கட்சியுடன் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள நிலையில் இதனை பாஜக பெரிய அளவில் வடமாநிலங்களில் பிரசார யுக்தியாக கையாண்டது. காங்கிரசுடன் ‛இந்தியா' கூட்டணியில் இருக்கும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் எனும் இந்து தர்மத்தை அழிப்பதாக பேசியுள்ளார் என பெரிய அளவில் வலைதளங்களில் பரப்பியது. இது காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில் தான் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் புறக்கணிப்பதாக கூறியிருப்பதை பாஜக பெரிய அளவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரமாக முன்னெடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வடமாநிலங்களில் மீண்டும் சிக்கல் உருவாகலாம்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications