தங்ககோவிலுக்கு குறி.. பாகிஸ்தானின் ஏவுகணைகளை நம் ராணுவம் வீழ்த்தியது எப்படி? பின்னணியில் ஆகாஷ்
சண்டிகர்: கடந்த மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் வரை நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் உச்சமடைந்து இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தான் பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள தங்க கோவில் உள்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்களை ஏவி தாக்க முயன்றது. ஆனால் அதனை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து அமிர்தசரஸ் தங்க கோவில் உள்பட பிற நகரங்களை நம் படை வீரர்கள் எப்படி பாதுகாத்தனர்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பதிலுக்கு நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்துவதாக நம் நாடு அறிவித்தது.
முன்னதாக கடந்த 7 ம் தேதி நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பதிலுக்கு பாகிஸ்தான் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் நம் நாட்டை குறிவைத்து தாக்கமுயன்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் நம் படை வீரர்கள், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்ககோவில் மற்றும் எல்லையையொட்டிய விமான தளம் மற்றும் பிற இடங்களை பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து நம் படை வீரர்கள் எப்படி பாதுகாத்தனர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்பை பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது ஆகாஷ் ஏவுகணை சிஸ்டம் மற்றும் எல் 70 ஏர் டிபென்ஸ் கன்ஸ் உள்ளிட்டவை தான்.
இதுபற்றி15வது இன்ஃபேன்ட்ரி டிவிஷன் (ஜெனரல் ஆபிசர் கமாண்ட்டிங்) மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛பாகிஸ்தானின் டார்கெட்டில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் இருப்பதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டோம். அமிர்தசரஸில் தங்க கோவில் உள்பட பல வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் குறிவைப்பதாக தகவல் கிடைத்தது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எந்த முறையான இலக்குகளும் இல்லை. பொதுமக்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களை மட்டுமே குறிவைக்கலாம் என்று நாங்களும் எதிர்பார்த்து இருந்தோம். குறிப்பாக தங்க கோவில். தங்க கோவிலை பாதுகாக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவினோம். மே 8 அதிகாலை இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்கியது. முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால் அதனை முறியடித்தோம்.
https://tamil.oneindia.com/news/india/how-indian-army-foiled-pakistan-target-to-attack-on-golden-temple-details-here-705333.htmlதங்கக் கோவிலை குறிவைத்த அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்மூலம் தங்கோவிலில் ஒரு கீறலை கூட பாகிஸ்தானால் ஏற்படுத்த முடியவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நம் ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தி வெற்றி கண்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் முன்கூட்டியே கணித்து முறியடித்துள்ளது'' என்றார்.
#WATCH | Amritsar, Punjab: Indian Army shows a demo of how Indian Air Defence systems, including the upgraded L-70 Air Defence Guns, saved the Golden Temple in Amritsar and cities of Punjab from Pakistani missile and drone attacks. pic.twitter.com/acej4SgL3v
— ANI (@ANI) May 19, 2025
முன்னதாக எல் 70, வான் பாதுகாப்பு அமைப்பு எப்படி அமிர்தசரஸ் தங்க கோவில் மற்றும் பஞ்சாப் நகரங்களை பாகிஸ்தான் வான்வெளி தாக்குதலில் இருந்து காப்பாற்றியது என்பது பற்றி டெமோ காண்பிக்கப்பட்டது.
-
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications