பிரபல நடிகை கைது.. கூட்ட நெரிசலில் அசிங்கப்பட்டு.. அசடு வழிந்து.. கடைசியில் தான் ஹைலைட்டே..!
திருட்டு வழக்கில் சீரியல் நடிகை ஒருவர் கைதானார்
கொல்கத்தா: கூட்ட நெரிசலில் ஒரு நடிகை மகா மட்டமாக அசிங்கப்பட்டுவிட்டார்.. என்ன நடந்தது என்று பாருங்கள்..!
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது... இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல் ஏராளமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர்.
அப்போது, புத்தகங்களை வாங்கி கொண்டு பணம் செலுத்த வாசகர்கள் வந்தனர்.. அந்த நேரம் பார்த்து அவர்களது பர்ஸ்கள் காணாமல் போயிருந்தது..

வாசகர்கள்
இப்படியே புத்தக காட்சியில் பல ஸ்டால்களில் இருந்த வாசகர்கள் தங்களது ஹேண்ட்பேக், பைகளை காணாமல் அதிர்ச்சியுள்ளனர்... இதனால், வாசகர்கள் தங்களின் மணிபர்ஸ்களை காணவில்லை என்று புத்தக கண்காட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்... இதனால் பெரும் கூட்டம் அங்கு கூடிவிட்டது.. கிட்டத்தட்ட 30 பேரின் பர்ஸ்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புத்தக கண்காட்சியின் மெயின் கேட் கதவு மூடப்பட்டது.. போலீசாரும் யாரையும் அங்கிருந்து நகர விடவில்லை.. அனைவரிடமும் சோதனையில் ஈடுபட்டனர்...

பர்ஸ்கள்
அப்போது புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த நடிகை ரூப்பா தத்தா அங்கிருந்த, குப்பை தொட்டியில் எதையோ ஒவ்வொன்றாக போட்டுக் கொண்டிருந்தார்... போலீசார் இதை பார்த்துவிட்டனர்.. எனவே, அந்த குப்பை தொட்டியில் என்ன இருக்கிறது என்று சென்று பார்த்தனர்.. அங்கே 30க்கும் மேற்பட்ட பர்ஸ்கள் ஒன்றாக குவிந்து இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. சுதாரித்து கொண்ட ரூப்பதா தத்தா அங்கிருந்து நைஸாக நழுவ முயன்றார்.

பிக்பாக்கெட்
உடனே அவரை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. ரூப்பா தத்தா வைத்திருந்த கைப் பையை வாங்கி போலீஸார் பரிசோதித்ததில், அதிலும் 10-க்கும் மேற்பட்ட பர்ஸ்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இறுதியில் அனைவரிடமும் பர்ஸை திருடியது இந்த நடிகைதான் என்பது உறுதியானது.. பிறகு, குப்பை தொட்டியில் இருந்த எல்லா பர்ஸ்களையும் எடுத்த போலீசார் அதிலிருந்து ரூ.65 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.. அதை உரிமையாளர்களிடம் சரிபாதியாக ஒப்படைத்தனர்...

நடிகை
இப்போது மீண்டும் நடிகையிடம் விசாரணை ஆரம்பமானது.. இவர் ஒரு சீரியல் நடிகையாம்.. கூட்டமான இடங்களை பார்த்தாலே குஷியாகிவிடுவாராம்.. அந்த இடங்களில் மட்டுமே பிக்பாக்கெட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது... இதைவிட ஒரு ஹைலைட் சமாச்சாரம் உள்ளது, அதாவது, எந்தெந்த இடங்களில், என்னென்ன திருடினோம் என்பதை தன்னுடைய டைரியில் தேதி வாரியாக குறிப்பிட்டு வைத்திருந்ததை பார்த்து போலீசார் மிரண்டே போய்விட்டனர்.

விசாரணை
இறுதியில் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்துள்ளனர். இதை பற்றி போலீசார் சொல்லும்போது, எங்களின் கவனத்தை திசை திருப்பி ரூபா திருடி வந்துள்ளார்... அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சிலபேர் இந்த திருட்டில் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்" என்றனர்.. டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள நடிகை ரூபா தத்தா ஏற்கனவே ஒருமுறை சர்ச்சையில் சிக்கியவர்..

பாலியல் புகார்
பிரபல டைரக்டர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியிருந்ததுடன், அதற்கு ஆதாரமாக சமூக வலைதள "சாட்டிங்" படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.. ஆனால் அது அனுராக் என்ற பெயர் கொண்ட வேறு ஒரு நபருடன் நடந்த உரையாடல் என்பது தெரியவந்ததால் நடிகையின் குட்டு உடைந்தது.. இப்படி அன்றே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மறுபடியும் திருட்டு கேஸில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications