ஹூட் ஹூட் புயல் நாளை கரையைக் கடக்கிறது! ஆந்திரா, ஒடிஷாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
புவனேஸ்வர்/ஹைதராபாத்: வங்கக் கடலில் உருவாகியுள்ள "ஹூட் ஹூட்' புயல் நாளை ஒடிஷா மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத், தாழ்வு மண்டலம் "ஹூட் ஹூட்' புயலாக மாறி இப்போது அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயல் ஆந்திரக் கடற்கரையில் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூர் இடையே நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலம் கோபால்பூரில் இருந்து தெற்கு தென்கிழக்காகவும் விசாகபட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்காகவும் 500 கி.மீ. தொலைவில் இந்த புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஆந்திரம், தெற்கு ஒடிஸா பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக், ராணுவத்தின் உதவியையும் கோரி உள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications