கோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்
பொன்னேரி அருகே மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
Recommended Video
பொன்னேரி: கோழிக்கறியை சமைக்க போன கோமதியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்துவிட்டார் கணவர்!
பொன்னேரியை அடுத்த அரவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி திரேச்குமார் - கோமதி. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். கோமதிக்கு 27 வயதாகிறது.
திரேச்குமார், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குடும்பத்துடனேயே அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

சமையல்
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரேச்குமார் கடைக்கு போய் கோழிக்கறி வாங்கி வந்தார். மனைவியிடம் அதை தந்து சமைக்க சொன்னார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையல் செய்ய கிச்சனுக்கு செல்ல முயன்றார்.

பிரச்சனை
அப்போது, குழந்தையை கவனித்து கொள்ளுமாறு கணவனிடம் சொல்லவும், அதற்கு அவர் மறுத்துள்ளார். குழந்தையை கவனிப்பது தொடர்பாகதான் இந்த பிரச்சனையே ஆரம்பமாகி உள்ளது. குழந்தையையும் கவனித்து கொண்டு எப்படி, சமையலும் செய்வது என்று கோமதி கேட்க, திரேச்குமார் ஆத்திரம் அடைந்தார். அதனால், சரமாரியாக கோமதியை தாக்கியதுடன், கீழே கிடந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இறுக்கி.. நெரித்து கொன்றார்.

தற்கொலை
கோமதி அங்கேயே துடிதுடித்து கீழே விழுந்து இறந்தார். இதை பார்த்து பயந்து போன திரேச்குமார், கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து விட்டதாக மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். திரேச்குமாரும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். மகளின் சடலத்தை அரவாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

திரேச்குமார்
யாருக்குமே திரேச்குமார் மீது சந்தேகம் வராதநிலையில், கோமதியின் உறவினர்களில் சிலருக்குதான் சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, பேட்டை போலீசில் புகார் சொல்லவும், கோமதியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த ரிப்போர்ட்டில்தான் கோமதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

கைது
இதைத் தொடர்ந்து திரேச்குமாரை போலீசார் பிடித்து விசாரிக்கவும்தான், கோபத்திலும் டென்ஷனிலும் கோமதியை கொன்றுவிட்டதாக சொன்னார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை தந்துள்ளது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications