For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி மனைவியுடன் பிரச்சனை: 2 மகன்களை கொன்று பேராசிரியர் ரயில் முன்பு குதித்து தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே பேராசிரியர் ஒருவர் தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சனையில் தனது இரண்டு மைனர் மகன்களை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹைதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து வந்தவர் பேராசிரியர் குருபிரசாத். அவருக்கும் அவரது மனைவி சுகாசினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவர்களின் மைனர் மகன்களான நந்தா மற்றும் விட்டல் தாயுடன் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பிரதிவாரம் சனிக்கிழமை காலை குருபிரசாத் தனது மகன்களை அழைத்துச் சென்றுவிட்டு அன்று மாலையே தாயிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குருபிரசாத் மகன்களை மெட்சல்லுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கழுத்தில் கூர்மையான பொருளால் குத்திக் கொலை செய்தார். பின்னர் உடல்களை போர்வையில் வைத்து தனக்கு சொந்தமான நிலத்தில் தோண்டி வைத்திருந்த குழியில் போட்டு புதைத்துவிட்டார். முன்னதாக அவர் குழி தோண்டியபோது எதற்கு என்று கேட்டவர்களிடம் கட்டுமானப்பணிக்காக தோண்டுவதாக தெரிவித்தார்.

மகன்களை புதைத்த பிறகு அவர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் ஜேம்ஸ் தெருவுக்கு சென்று அங்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது செல்போனில் மகன்களை கொலை செய்தது பற்றியும், அவர்களின் உடல்களை புதைத்த இடம் பற்றியும் எஸ்.எம்.எஸ். டைப் செய்த அவர் அதை அனுப்பாததால் டிராப்டில் இருந்தது. அதை பார்த்த போலீசார் அவர் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 2 உடல்கள் அழுகிக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்களை தோண்டி எடுத்த போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பேராசிரியர் தனது மகன்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A professor stabbed his two sons in the neck before committing suicide over dispute with his ex-wife in Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X