கொல்கத்தா பலாத்கார கேஸ்.. வழக்கில் பெரிய ட்விஸ்ட்.. குற்றவாளி புதிய வாக்குமூலம்.. எல்லாம் மாறுது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சிலரால் திட்டமிட்டபடி சட்டத்தில் சிக்க வைக்கப்படுவதாகவும் தனது வழக்கறிஞர் கவிதா சர்க்காரிடம் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை நடந்த ஒரு நாள் கழித்து.. அதாவது ஆகஸ்ட் 10 அன்று சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த செமினார் ஹால் அருகே அவரது புளூடூத் ஹெட்செட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

kolkata

பாலிகிராஃப் சோதனையின் போதும் அவர் குற்றமற்றவர் என கூறி உள்ளார். சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன, அந்தப் பெண்ணைக் கொன்றதாகக் கூறப்படும் பிறகு அவர் என்ன செய்தார் என்பது உட்பட முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. அவரை கொலை செய்யாததால் அந்த கேள்வி செல்லாது என்று சிபிஐ அதிகாரிகளிடம் கூறினார். தான் கொலை செய்யவில்லை என்றுதான் பல இடங்களில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பாலிகிராஃப் சோதனையில், ராய், மருத்துவமனையின் செமினார் ஹாலுக்குள் நுழைந்தபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறியுள்ளார். அதோடு சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று அந்த அறைக்குள் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாகவும், இதனால் பீதியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். இதில்தான் புளூடூத் ஹெட்செட் விழுந்து இருக்கும் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.

பாதிக்கப்பட்டவரை தனக்குத் தெரியாது என்றும், தான் நிரபராதி, ஆனால் நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். நான் முன்பே புகார் கொடுத்திருப்பேன். ஆனால் அப்படி செய்தால் நம்ப மாட்டார்கள் என்று விட்டுவிட்டேன் என்று, சஞ்சய் ராய் கூறியுள்ளார்.

சந்தேகம்: ஆனால் ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

இந்த ஆய்வின் முடிவில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துடன் கலந்தாலோசிக்கும். (AIIMS) நிபுணர்கள் இறுதிக் கருத்துக்கு இந்த ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பலாத்காரம் மற்றும் கொலையில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணையில் எந்த விதமான ஓட்டையும் இருக்க கூடாது என்ற நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் குறித்து எய்ம்ஸ் நிபுணர்களிடம் இறுதிக் கருத்து கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அந்த கும்பல் பலாத்காரம் செய்ததாக முதலில் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் இது கும்பல் பலாத்காரம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளன.

விசாரணை: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (ஆர்ஜிகேஎம்சிஎச்) முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று இரவு இரண்டாவது சுற்று பாலிகிராஃப் சோதனையை அவரிடமும் மேற்கொண்டது.

மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஃப்எஸ்எல்) குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கில் சஞ்சய் ராயிடம் ஏற்கனவே இந்த சோதனை நடத்தப்பட்டு விட்டது. ஆனால் சந்திப் கோஷிடம் நடத்தப்படவில்லை.

சந்திப் கோஷ் இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு கொண்டு இருக்கலாம். அவரும் இந்த விவகாரத்தில் தவறு செய்து இருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் அவரிடம் நடத்தப்பட்ட சோதனை கண்டிப்பாக பல முக்கியமான திருப்பங்களை இந்த வழக்கில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது?: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சஞ்சய் ராய், அதே நாள் இரவில் வேறு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் இது தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதாவது மருத்துவரை பலாத்காரம் செய்யும் முன் அதே நாள் இரவு சஞ்சய் ராய் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

விசாரணையின் போது, ​​சஞ்சய் ராய் குற்றம் நடந்த இரவில் தான் செய்ததை எல்லாம் விவரித்தார். நகரத்தில் இரண்டு சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்றதை ஒப்புக்கொண்டார், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை.

அதேபோல் வருகிற வழியில் தெருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்,. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூடுதலாக, ராய் தனது காதலியுடன் வீடியோ கால் செய்ததாகவும், அவளிடம் நிர்வாண புகைப்படங்களைக் கேட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+