உங்களைவிட மிகப் பெரிய ரவுடி நான்... சிவ்பால் யாதவ் மக்களின் தலைவர்: முலாயம்சிங் ஆவேசம்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் இருக்கும் சில இளைஞர்கள் தங்களை பெரிய ரவுடியாக கருதுகிறார்கள்... அவர்கள் அனைவரையும் விட மிகப்பெரிய ரவுடி நான் என்றும் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிவ்பால் யாதவ் மக்களின் தலைவர் என்றும் ஆவேசமாக முலாயம்சிங் யாதவ் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குள் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். இதனால் அகிலேஷ் யாதவை சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்க முலாயம்சிங் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், தாம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியானவை பொய்யான செய்திகள் என்று கண்ணீருடன் கூறினார். ஆனால் அகிலேஷ் அப்படியான முடிவை என்னிடமே தெரிவித்தார் என சித்தப்பா சிவ்பால் யாதவ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரான முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:
சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இந்த கட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது.
கட்சியிலும் குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள குழப்பம் என்னை காயப்படுத்தியுள்ளது. தற்போது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் தங்களை மிகப் பெரிய ரவுடிகளாக நினைக்கிறார்கள்..
நீங்கள் நினைப்பது போல நான் பலவீனப்படவில்லை. உங்களை எல்லாம்விட மிகப் பெரிய ரவுடி நான்தான். சிவ்பால் யாதவ் எனக்காகவும் கட்சிக்காகவும் செய்தவைகளை அப்படி ஒன்றும் எளிதாக மறந்துவிட முடியாது.
தற்போதைய குழப்பத்துக்கு காரணமே குடிகாரர்களையும் குண்டர்களையும் கட்சியில் சேர்த்ததுதான்... சிலருக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் உடனே தலைக்கணம் வந்துவிடுகிறது. சிவ்பால் யாதவ் சாதாரண மனிதர் அல்ல.. மக்கள் தலைவர்.
அமர்சிங் என்னுடைய சகோதரர். மிகவும் கடினமான நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்தவர்.
இவ்வாறு முலாயம்சிங் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications