For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை 26/11 பாணியில் தாக்குதல் நடக்கலாம்: உளவுத் துறை எச்சரிக்கை.. ஏக பாதுகாப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: 26/11 பாணியில் நாளை சுதந்திர தினத்தன்று தீவிரவாதத் தாக்குதல் நடக்கக் கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளதால், டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் அங்கு தேசிய கொடி ஏற்றுவது, இது 2-வது ஆண்டு ஆகும்.

சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

26/11 பாணியில் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறையும் எச்சரித்துள்ளது.

40 ஆயிரம் போலீஸ் குவிப்பு

40 ஆயிரம் போலீஸ் குவிப்பு

இவற்றைக் கருத்தில் கொண்டு, டெல்லி நகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், துணை ராணுவப் படையினர் மற்றும் டெல்லி போலீசார் 12 ஆயிரம் பேர். விழா நடைபெறும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள உயர்ந்த கட்டிடங்களில், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். சாலைகளில் போக்குவரத்து கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்

500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், செங்கோட்டைக்கு வரும் வழிநெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். செங்கோட்டையைச் சுற்றிலும் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

தடை

தடை

விழா நடைபெறும் மைதானத்துக்குள், தண்ணீர் பாட்டில், செல்போன், தொலைநோக்கி, குடை, ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, கைப்பை, சூட்கேஸ், டிரான்சிஸ்டர், சிகரெட் லைட்டர், டிபன் பாக்ஸ் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காந்தி சமாதி

காந்தி சமாதி

செங்கோட்டைக்கு வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதனால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பறக்க தடை

பறக்க தடை

தரையில் மட்டுமின்றி, வானத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஹெலிகாப்டர்களில் பறந்தபடி உன்னிப்பாக கண்காணிப்பார்கள். செங்கோட்டைக்கு மேலே விமானங்களோ, ஹெலிகாப்டர்களோ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வான்வழி தாக்குதலை முறியடிக்க, விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப்படை, மோப்ப நாய்ப்படை, வெடிகுண்டு கண்டறியும் படை ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன.

எல்லையில்

எல்லையில்

உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டி, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன சோதனை நடந்து வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

நோ பார்க்கிங்

நோ பார்க்கிங்

குறிப்பிட்ட பகுதிகளில், நாளை காலை 5 மணி முதல் 9 மணிவரை, பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பொதுமக்கள், சொந்த வாகனங்களில் செல்லாமல், மெட்ரோ ரெயில்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், மெட்ரோ ரெயில் நிலையங்களில், வாகன நிறுத்தங்களை, நாளை காலை முதல் பகல் 2 மணிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடல்வழி தாக்குதல்

கடல்வழி தாக்குதல்

இதற்கிடையே, மும்பை தாக்குதல் பாணியில், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

தாமரை கோவில், நொய்டாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்கள், செங்கோட்டை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

விமானக் கடத்தல்

விமானக் கடத்தல்

பா.ஜனதா அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள், சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் ஆகியவற்றின் மீதும் அல்-கொய்தா இயக்கம் குறி வைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் காபூல்-டெல்லி வழித்தட ஏர் இந்தியா விமானங்களை கடத்தவோ அல்லது தகர்க்கவோ பாகிஸ்தான் உளவுப்படை திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கொச்சியில் உள்ள தென்பிராந்திய கடற்படை தலைமையகம் உள்ளிட்ட கடற்படை தளங்கள் தகர்க்கப்படலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Security agencies have warned about a possible 26/11 style influx of terrorists from the sea and an attack on BJP offices, asking the forces to remain alert on the occasion of Independence Day to thwart any such attempt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X