ஏற்கனவே ஏகப்பட்ட 'ஏழரை'- ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணியும் ஆடிப் போனது- மாயாவதி நிபந்தனை அப்படி!
டெல்லி: "இந்தியா" கூட்டணிக்குள் இருக்கிற பிரச்சனைகள் போதாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விதித்ததாக சொல்லப்படும் நிபந்தனைகள் புதிய தலைவலியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியதுதான் "இந்தியா" கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். "இந்தியா" கூட்டணி இதுவரை 4 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்த 4 ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டுகின்றன.

"இந்தியா" கூட்டணியில் மாநில கட்சிகள் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குள்ள மாநில கட்சிகள், காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களையே ஒதுக்கி வருகின்றன. இதனை சகித்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை "இந்தியா" கூட்டணிக்குள் கொண்டு வர அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள்தான் தர முடியும் என்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. இதனை ஏற்க முடியாமல்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணிக்கு விரும்புகின்றனர் மாநில காங்கிரஸ் தலைவர்கள்.
இந்த நிலையில் "இந்தியா" கூட்டணியில் இணைவதற்காக பகுஜன்சமாஜ் கட்சி அதிரடியாக ஒரு நிபந்தனை விதித்துள்ளதாம். அதாவது மாயாவதியை "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனையாம். ஏற்கனவே மல்லிகார்ஜூன கார்கேவை மமதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததால்தான் நிதிஷ்குமார் கோபத்தில் இருக்கிறார். இப்போது மாயாவதி இப்படி ஒரு நிபந்தனை விதித்து இலவு காத்த கிளியாக காத்திருப்பது "இந்தியா" கூட்டணியில் புகைச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications