ராமர் கோவில் பிரச்சனையில் அலட்சியம் காட்டினால் எரிமலையாக பொங்குவோம்...: மிரட்டும் வினய் கட்டியார்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த ஒரு அரசும் புறக்கணித்து அலட்சியம் காட்டினால் ராம பக்தர்கள் எரிமலையாக பொங்கி எழுவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. வினய் கட்டியார் மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசுக்கு முழுமையான பலம் இல்லாத நிலையில் ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. வினய் கட்டியார் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதார மேம்பாட்டை விட ராமர் கோவில் பிரச்சனை மிக முக்கியமானது. இந்த விவகாரத்தில் உரிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
ராமர் கோவில் பிரச்சனையை எந்த ஒரு அரசு புறக்கணித்தாலும் ராம பக்தர்கள் எரிமலையாக கொந்தளிப்பார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் ராமர் கோவில் கட்டுவதற்காக சட்டத்தின் மூலமாகவோ பேச்சுவார்த்தையின் மூலமாகவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications