போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம்.. விவசாயிகள் எச்சரிக்கை
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்வதற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவாசயிகளின் போராட்டம் இன்றும் 17வது நாளாக நீடிக்கிறது. கடும் வெயிளிலும் குளிரிலும் போராடும் தமிழக விவசாயிகளுக்கு வட மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் பலரும் தினமும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெரினா, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை காவல்துறை கைது செய்வதற்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது போலீசார் கை வைத்தாலோ அல்லது கைது செய்தாலோ தீக்குளிப்போம் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications