காவிரி: அரசியல் செய்யும் மத்திய அரசு- கூட்டாட்சிக்கு வேட்டு- உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வாதம்
கர்நாடகா தேர்தலுக்காக காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்வதாக தமிழக அரசு சாடியுள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் விளையாட்டை நிகழ்த்துகிறது; இது கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் செயல் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எச்சரித்தது.
காவிரி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை; கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர், அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றது மத்திய அரசு.

ஆகையால் வழக்கின் விசாரணயை மே 12-ந் தேதிக்கு பின்னர் ஒத்தி வைக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிட்டார். அப்போது வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்தே, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. இது வெட்கக் கேடானது.
கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான அரசியலாக இதை பார்க்கிறது மத்திய அரசு. மத்திய அரசைப் பொறுத்தவரையில் கர்நாடகா தேர்தல் குறித்துதான் கவலைப்படுகிறது.
கர்நாடகா தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரிய வரைவு அறிக்கையை உருவாக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதை நீங்கள் அனுமதித்தால் இந்த நாட்டின் கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைப்பதாகும் என எச்சரித்தார்.
மேலும் தமிழகத்தில் கோடை கால வெப்பநிலையை விட காவிரி உஷ்ணம் அதிகமாக இருக்கிறது; அங்கே குடிப்பதற்கே நீர் இல்லை 2 மாதங்களாகியும் எந்த ஒரு வரைவு திட்டமும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. அப்படியானால் தமிழக மக்களுக்கு நாங்கள் என்ன பதிலைத்தான் சொல்வது? என்றும் சேகர் நாப்தே கேள்வி எழுப்பினார்.\
அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய வரைவு அறிக்கை தயாராகிவிட்டது என்கிறார் அட்டர்னி ஜெனரல். இதை நாங்கள் எப்படி நம்புவது? எதற்காக இந்த மாற்றந்தாய் மனப்பான்மை? தமிழகத்துக்கு மத்திய அரசு மீது கிஞ்சித்தும் கருணை இல்லையே ஏன்? என்றார்.
இதனைத் தொடர்ந்தே தமிழகத்துக்கு குடிநீருக்காக 4 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என கறார் குரலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications