தீர்ந்த ஆசை.. கள்ளக்காதலி படுகொலை.. உடலை துண்டாக்கி கிணற்றில் வீசிய காதலன்! ஷாக் காரணம்.. அதிர்ச்சி
ராஜஸ்தானில் திருமணமான இளம்பெண்ணுக்கும், இன்னொருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
ஜெய்ப்பூர்: டெல்லில் ஷ்ரத்தாவை அப்தாப் கொலை செய்து உடல்களை துண்டாக்கியது போல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலியை திட்டமிட்டு கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கிணறு உள்பட பல இடங்களில் காதலன் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விசாரணையில் இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து உடல்களை துண்டாக்கி குற்றத்தை மறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்து உடல்களை துண்டாக்கி, எலும்புகளை தூளாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியா மும்பை உள்பட நாட்டின் சில இடங்களிலும் கொலை செய்து உடல்களை துண்டாக்கி குற்றத்தை மறைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றனர். இதில் குற்றவாளிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற ஷாக் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது ராஜஸ்தானில் மற்றொரு கொடூரமான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

மாயமான பெண்
ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் ஸ்ரீபாலாஜி போலீஸ் எல்லைக்குட்பட்ட பாலசார் கிராமத்தை சேர்ந்த பெண் குட்டி. இவருக்கும் முண்டாசர் பகுதியில் உள்ள ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் தான் குட்டி கடந்த மாதம் 20ம் தேதி பாலசார் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மாமியார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குட்டி புறப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் திடீரென்று மாயமானார்.

செல்போன் சுவிட்ச் ஆப்
அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் பேச முடியவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குட்டியை ஆங்காங்கே தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ஜனவரி 22ல் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

ரத்தகறை படிந்த ஆடை மீட்பு
இந்நிலையில் ஜனவரி 28ம் தேதி நாகூர் நகரின் மால்வா சாலையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவின் பின்பக்கத்தில் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், முடிகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் அந்த ஆடையை கைப்பற்றினர். அப்போது அது குட்டியின் ஆடை என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதனால் குட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது.

கள்ளக்காதலனை பிடித்த போலீசார்
இதையடுத்து போலீசார் குட்டியின் உடலை தேட தொடங்கினர். ஆனால் எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குட்டியின் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது தான் குட்டிக்கும், இன்னொருவருக்கும் இடைய கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதுபற்றி விசாரணை தீவிரமானது. மேலும் குட்டியின் கள்ளக்காதலனையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலை செய்தது அம்பலம்
அதன்படி குட்டியின் கள்ளக்காதலன் அனோபரம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது அனோபரம் தான் குட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இருவரும் கள்ளக்காதலில் இருந்த நிலையில் குட்டி திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் அவரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

துண்டாக்கப்பட்ட உடல்கள்
மேலும் கொலையை மறைக்க திட்டமிட்ட அவர் குட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி தெர்வா பகுதியில் உள்ள கிணறுகள் உள்பட மேலும் சில பகுதிகளில் வீசியதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடல் பாகங்கள் வீசப்பட்ட கிணறுகளில் போலீசார் கடந்த 3 நாட்களாக உடல்களை தேடியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாகூர் எஸ்பி ராமமூர்த்தி ஜோஷி கூறுகையில், "குட்டியை கொன்றதை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அவர் தவறான விஷயங்களை கூறி விசாரணையை திசை திருப்புகிறார். குட்டியின் உடல் பாகங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படும். அதன்பிறகு டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும்'' என்றார். இந்த சம்பவம் ராஜஸ்தானை அதிர்ச்சிய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications