• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஜக என் தாய்.. நான் சேவகம் செய்யும் மகன்: கண்ணீருடன் உரையாற்றிய மோடி!!

By Mathi
|

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி என் தாய்க்கு சமம்.. என்னைத் தவிர என் தாய்க்கு வேறு யார் சேவகம் செய்வது என்று நா தழுதழுத்த குரலில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார் நரேந்திர மோடி.

டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான ஏற்புரை:

வாஜ்பாயின் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் உண்டு. அத்வானி, ராஜ்நாத்சிங்கின் ஆசீர்வாதங்களுக்கு மிகவும் நன்றி.

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்துள்ளோம். இங்கே எந்த ஒரு பதவியிலும் நாம் உட்காரவில்லை.. மக்களின் நம்பிக்கையைப் பெற்று அமர்ந்துள்ளோம்.

In emotional speech, Modi says 'I will not live for myself, but for the country'

செப்டம்பர் 13-ந் தேதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன்; அடுத்த 15-ந் தேதியே பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது கட்டுப்பாடு கொண்ட போர்வீரனைப் போல ராஜ்நாத்தை சந்தித்து எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை எப்படியெல்லாம் நிறைவேற்றியிருக்கிறேன் என விவரித்தேன்

லோக்சபா தேர்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒருவேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருந்தால் அது முந்தைய ஆட்சியின் மீதான வெறுப்பின் விளைவாகவே மட்டும் இருக்க முடியும்.

ஆனால், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு, மக்கள் பாஜக மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே காரணம். மக்கள் மத்தியில், அவர்கள் எண்ணங்கள் பூர்த்தி செய்யப்படும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது. மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி. இளைஞர்கள் முன்னேற்றமும் மகளிர் முன்னேற்றமும் பாஜகவின் முதன்மை கடமைகளாக இருக்கும்.

ஜனநாயகத்தின் வலிமை

ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலின் போது திட்டமிடப்பட்ட அனைத்து பிரசார கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். ஒரே ஒரு பிரசார கூட்டம் மட்டுமே உள்ளூர் தலைவர் இறந்ததால் ரத்தானது. முதல்வரான பின்னர் முதல்வர் அறையையே பார்த்தேன்..அதுதான் இப்போதும் இங்கே நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Narendra Modi touching his forehead on the ground outside the entrance of Parliament <a href="http://t.co/EMYS1OiaB1">pic.twitter.com/EMYS1OiaB1</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/468646457533149184">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்- அது பற்றி நாம் விவாதிக்கலாம். ஜனநாயகத்தின் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

ஒரு ஏழையின் மகன் இங்கே நின்று பேசுகிறேன் எனில் ஜனநாயகத்தின் வலிமைதான் காரணம்.

நா தழுதழுத்த குரல்...

பாரதிய ஜனதா கட்சி என் தாய்க்கு சமம். தாய்க்கு மகனைத் தவிர வேறு யார் நல்ல முறையில் சேவகம் செய்ய முடியும்.( அப்போது உணர்ச்சிவசப்பட்ட மோடி கண்ணீர் சிந்தினார்.. மேற்கொண்டு பேச முடியாமல் அவர் நா தழுதழுத்தது.பிறகு தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு பிறகு உரையாற்றினார்)

பிரதமராகி மக்களுக்கு நான் ஆற்றப்போகும் சேவையை எனது கடமையாகவே கருதுகிறேன். கடந்த 5 தலைமுறைகளாக பாஜக தொண்டர்கள் பட்ட அரும்பாட்டுக்கு கிடைத்த வெற்றி அது.

மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செலுத்துவேன். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை என்று பழிக்க மாட்டேன். அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை பாராட்டுகிறேன்.

வாஜ்பாய்..

இத்தருணத்தில், பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் இங்கு இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நான் இங்கு நிற்க காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த உத்வேகமே. கட்சிக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டுவர்களே.

மக்கள் நலனே முக்கியம். மக்களுக்கு நன்மை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. எனது ஆட்சித்திறன் குறித்த சோதனை அறிக்கையை 2019-ல் நான் மக்கள் முன்னால் சமர்ப்பிப்பேன்.

பொறுப்புணர்வு என்ற புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் என்ன நடந்திருந்தாலும் அனைத்தையும் மறப்போம். நல்ல நம்பிக்கையே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்

இவ்வாறு மோடி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

அவர் உரையாற்றி முடிந்ததும் பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Narendra Modi was unanimously elected as the leader of BJP parliamentary party on Tuesday with the Prime Minister-designate saying the election result was a vote for "new hope and aspiration" and he would try his best to live up to the expectations of the people of the country. During his acceptance speech, 63-year-old Modi broke down when he referred to L K Advani's mention that he had done favour to the party by taking up the responsibility.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more