வயநாட்டை தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்திலும் தொடரும் சோகம்! மழை வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

Landslide Himachal Pradesh Mandi

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் ராஜ்வான் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கனமழை நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரை காணவில்லை. வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கின்றன.

மீட்பு பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். ஆனால், தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், "இமாச்சலப் பிரதேசம் மிகப்பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 50 பேரை காணவில்லை. 2 பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். மீட்பு பணிக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை நாடியுள்ளோம்.

அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. எனவே மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ட்ரோன் கொண்டும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளனர்.

மண்டி, குலு, கின்னார், லாஹால், ஸ்பிதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மாநிலத்திற்கு ரூ.655 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+