‛20 பெண்கள் கூட்டு பலாத்காரம்’.. வீடியோ வேற.. ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிய 2 பேர்.. திடுக் சம்பவம்
ஜெய்ப்பூர்: அங்கன்வாடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து 20 பெண்களை 2 பேர் கூட்டு பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்த மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றங்கள் வழியாக சிறை தண்டனை பெற்று கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கூட ஆங்காங்கே சிலர் பெண்களிடம் தவறாக நடந்து வருகின்றனர். அந்த வகையில் தான் ராஜஸ்தானில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பெண்களை 2 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடுக்கிட வைக்குமு் சம்பவம் குறித்த தகவல் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி முனிசிபல் கவுன்சில் தலைவராக இருப்பவர் மகேந்திர மேவாடா. அதேபோல் சிரோஹி முன்சிபலின் முன்னாள் ஆணையாளர் மகேந்திர சவுத்ரி. இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இதற்கிடையே தான் பாலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் போலீசில் அவர்கள் 2 பேர் மீதும் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.
அந்த புகாரில், ‛‛மகேந்திரா மேவாடா, மகேந்திர சவுத்ரி ஆகியோர் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டி வருகின்றனர். அங்கன்வாடி பணியை பெற்று தருவதாக கூறி இருவரும் மோசடி செய்து வருகின்றனர். அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னையும் ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டனர். அங்கன்வாடியில் வேலை தருவதாக கூறி என்னை அழைத்தனர்.
இதையடுத்த நான் அவர்கள் அழைத்த இடத்துக்கு சென்றேன். அப்போது அவர்கள் எனக்கு உணவு, தங்குமிடம் ஏற்படுத்தி கொடுத்து பலாத்காரம் செய்தனர். சாப்பிடும் உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த தவறை செய்தனர். மேலும் அவர்கள் வீடியோ எடுத்து அதனை வெளியிடுவதாக மிரட்டுகின்றனர்.
அதாவது ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் ஆபாச வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 20 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டுகின்றனர்'' என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பராஸ் சவுத்ரி கூறுகையில், ‛‛இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பு புகார் வந்தது. ஆனால் பொய் புகார் என தெரிந்தது. ஆனால் இப்போது 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications