சத்தீஸ்கரில் கரைசேருமா காங்கிரஸ்? வெற்றியை தீர்மானிக்கும் வாக்குறுதிகள்! நிறைவேற்ற தவறியவை என்னென்ன?
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல இந்த முறை காங்கிரஸா? பாஜகவா? யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் வாக்குறுதிகளில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 40.78 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியில் இருந்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், நாட்டின் மற்ற எல்லா மாநிலங்களை போலவே சத்தீஸ்கரிலும் மக்கள், அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் தங்களின் புதிய அரசை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். அதாவது கடந்த 2013ம் ஆண்டு பாஜக, 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளுக்கு சோலார் பம்புகள், ஸ்மார்ட் கார்டு மூலம் சுகாதார வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது.
இவை அனைத்தையும் பாஜக நிறைவேற்றியது. ஆனால் மறுபுறம் அரசு காலிப் பணியிடங்களில் நேரடி ஆட்சேர்ப்பு முறையை பின்பற்றவில்லை, உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை கொடுக்க தவறிவிட்டது. மேலும் அரசு பணிகளுக்கு அவுட் சோர்சிங் முறையில் அதிக அளவில் ஆட்கள் சேர்ப்பு உள்ளிட்டவற்றை செய்தது. எனவே 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடத்தை கற்பித்துள்ளனர். மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் அக்கட்சி முழுமையாக 15 இடங்களை கூட பெற முடியில்லை.
இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் தரப்பில், அரசு வேலைகளில் அவுட்சோர்ஸிங் நிறுத்தம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கு கொள்முதல், ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துதல், மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. இதில் வாக்கு கொடுத்ததை போல அவுட் சோர்சிஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆனால் வேலை வாய்ப்பில் ஊழல் அதிகரித்தது.
இது பெரும் பஞ்சாயத்தாக வெடிக்கையில், வேலைவாய்ப்புகளை நிரப்புவதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மற்றபடி நெல்லுக்கு விலை உயர்வு போன்றவற்றை காங்கிரஸ் அமல்படுத்தியுள்ளது. இப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு, அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை உணர்ந்து வாக்களிக்கிறார்கள். எனவே இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது வாக்குப்பதிவு எண்ணிக்கையின்போதுதான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications