ஐடி வேண்டுகோளின் அடிப்படையிலேயே சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது: உள்துறை அமைச்சகம் விளக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த சோதனையின் போது, வருமான வரித்துறை வேண்டுகோளின் பேரிலேயே மத்திய பாதுகாப்பு படை அளிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: வருமான வரித்துறையின் வேண்டுகோளின் அடிப்படையில் தான் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டின் முன்பு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டது என மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவின் அண்ணாநகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நேற்று நடந்தது. இதேபோல் அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடுகள், மற்றும் தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதனிடையே நேற்று மதியம் 12 மணியளவில் துணை ராணுவ படை (சி.ஆர்.பி.எப்) 20 பேர் திடீரென ராமமோகன ராவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றி நின்று கொண்டு துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
தமிழக காவல்துறையுடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு மேற்கொண்டனர். வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடக்கும் போது மாநில காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் நேற்று சோதனை நடத்தப்பட்ட 14 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனையின் போது தமிழக போலீசாருடன் துணை ராணுவப் படையுடன் பாதுகாப்பில் ஈடுபட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தான் சோதனைகள் நடப்பதாக சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், வருமான வரித்துறையின் வேண்டுகோள் அடிப்படையில் ராம மோகனராவ் வீட்டின் முன்பு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டது. சோதனைக்கு முன்தினம் பாதுகாப்பு கேட்டு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்தது. இதனால் ஒவ்வொரு இடத்திற்கும் 10 முதல் 20 வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய உள்துறை கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications