இவ்வளவு நன்றாக ஆடியும்.. ஓரம்கட்டப்படும் ஷ்ரேயாஸ்.. அடுத்த போட்டியில் நோ சான்ஸா? என்னாச்சு?
ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். அறிமுக போட்டியிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Recommended Video
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடி வருகிறது. ரோஹித், கோலி, பண்ட் இல்லாத நிலையில் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அதன்படி அணிக்குள் இந்த முறை ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சாகா, அக்சர் பட்டேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஓப்பனிங்
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டாப் ஆர்டர் அவ்வளவு சிறப்பாக இல்லை. முதல் இன்னிங்சில் மயங்க் 13, புஜாரா 26, ரஹானே 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். ஷ்ரேயாஸ் மட்டும் அதிரடியாக ஆடி 105 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 52, ஜடேஜா 50, அஸ்வின் 38 ரன்கள் எடுத்தனர். மற்றபடி விர்த்திமான் சாஹா வெறும் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.

நியூசிலாந்து
இதனால் இந்திய அணி 345 ரன்கள் எடுத்தது. இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணியில் லாதாம் 95, யாங் 89 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 296 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மயங்க் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கில் வெறும் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.

புஜாரா
அதன்பின் புஜாரா 22, ரஹானே 4 ரன்கள் எடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் 65 ரன்கள் எடுத்தார். ஆனால் இரண்டு இன்னிங்சில் சிறப்பாக ஆடியும், முதல் போட்டியிலேயே நன்றாக ஆடியும் ஷ்ரேயாஸ் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது. இவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

சந்தேகம்
ஏனென்றால் அடுத்த போட்டியில் சாகாவிற்கு பதிலாக கேஎஸ் பரத் வர வாய்ப்புள்ளது. கீப்பர் மாற்றம் உறுதி. மற்றபடி கேப்டன் கோலி அணிக்குள் வருகிறார். ஓப்பனிங் எப்போதும் போல் மயங்க் - கில்தான். இதனால் கோலி உள்ளே வருவதால் ஒருவரை நீக்க வேண்டும். எனவே ஷ்ரேயாஸ் மட்டுமே நீக்கப்பட வாய்ப்பு உள்ள வீரர்.

ரஹானே
ரஹானே , புஜாரா சரியாக ஆடுவது இல்லை. ஆனாலும் புஜாரா மூத்த வீரர், ரஹானே துணை கேப்டன் என்பதால் அடுத்த போட்டியில் இவர்கள் நீக்கப்பட வாய்ப்பு இல்லை. ஷ்ரேயாஸ் ஓப்பனிங் இறங்கும் பட்சத்தில் மயங்க்கிற்கு பதிலாக அவர் இறங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கும் கூட குறைந்த வாய்ப்பே உள்ளது. எனவே அடுத்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஆடுவது சந்தேகம்தான்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications