அங்க என்ன பார்த்துட்டு இருக்க?.. சிராஜை பொடனியிலேயே அடித்த ரோஹித்: நடந்தது என்ன? வைரல் வீடியோ!
ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான மேட்சின் போது முகமது சிராஜ் தலையில் கேப்டன் ரோஹித் சர்மா அடித்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா வெற்றியோடு தொடங்கி உள்ளது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய கோச் டிராவிட் ஆகியோர் போட்டியை வெற்றியோடு தொடங்கி உள்ளனர்.
நேற்று இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்பின் 19.4 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.

சிராஜ்
இந்த நிலையில் நியூசிலாந்து பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் சிராஜ் பவுலிங் செய்தார். இதில் முதல் பந்திலேயே சிராஜ் கையில் காயம் பட்டது. பந்தை தடுக்க போய் அவரின் இடது கையில் சுண்டு விரல் சதை பகுதி கிழிந்தது. இதனால் வலியில் துடித்தவர் கட்டுபோட்டுக்கொண்டு வலது கையில் எப்போதும் போல பவுலிங் செய்தார்.

காயம்
காயத்தோடு பவுலிங் செய்தாலும் அந்த ஓவரில் சிராஜ் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதோடு அந்த ஓவரில் சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தார். இவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இடது கையில் தையல் போட வேண்டும். இதனால் இவர் அடுத்த போட்டியில் ஆடுவது கொஞ்சம் சந்தேகம்தான்.

வீடியோ
இந்த நிலையில்தான் இந்தியா பேட்டிங் செய்த போது நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி ட்வீட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதில் ரோஹித்தும் கேஎல் ராகுலும் பெவிலியனில் அமர்ந்து எதையோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை பார்த்தபடியே இருவரும் தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
|
அடித்தார்
அவர்களுக்கு முன் சிராஜ் அமர்ந்து இருக்கிறார். சிராஜும் ரோஹித் எங்கே பார்த்துக்கொண்டு இருந்தாரோ அங்கேயே உற்று கவனித்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்த ரோஹித்.. அங்கே என்ன கவனம் என்பது போல தலையில் சிராஜ் தலையில் அடித்தார். அங்கே என்ன பார்த்துகிட்டு இருக்க என்பது போல சிராஜ் தலையில் ரோஹித் அடித்தார்.

என்ன நடந்தது
ஆனால் சிராஜை ரோஹித் சீரியஸாக அடிக்கவில்லை. நட்பாக தலையில் தட்டுவது போல தட்டினார். இதற்கு சிராஜும் சிரித்துக்கொண்டு தலையை திருப்பினார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. அப்படி இவர்கள் மூன்று பேரும் சேர்ந்த மேட்ச் நடக்கும் போது என்னதான் பார்த்துக்கொண்டு இருந்தனர் என்பது நெட்டிசன்கள் இடையே கேள்வியாக எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications