உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிற்கு 2-வது இடம் !
டெல்லி: உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.
2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய 'horticultural statistics at a glance 2015' என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் விவசாயத்தில் காய்கறிகளை விட பழங்களை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்றும் சீனா முதலிடத்தில் உள்ளது என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, மகாராஷ்டிரா மாநிலம் பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேச ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் பழங்களிலேயே அதிகமாக இந்தியாவின் திராட்சைப்பழ ஏற்றுமதி ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது. மாம்பழம் மற்றும் வாழைப்பழ ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளன.
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்:
சீனா - (154.364 மில்லியன் டன்)
இந்தியா - (82.631 மில்லியன் டன்)
பிரேசில் - (37.774 மில்லியன் டன்)
அமெரிக்கா - (26.986 மில்லியன் டன்)
ஸ்பெயின் - (17.699 மில்லியன் டன்)
மெக்ஸிகோ - (17.553 மில்லியன் டன்)
இத்தாலி - (16.371 மில்லியன் டன்)
இந்தோனேசியா - (16.003மில்லியன் டன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications