இந்தியா சீனா எல்லை...ஸ்ரீநகர் லே நெடுஞ்சாலை...பொது போக்குவரத்துக்கு மூடல்!!
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் சீனா ஊடுருவ முயற்சித்து இந்திய ராணுவப் படையினரால் விரட்டப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்ரீநகர் லே பகுதியில் பொது வாகனங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ராணுவத்தினர் மற்றும் அவர்களது வாகனங்களுக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்திய, சீன எல்லையில் எப்போதும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கும் பகுதி கிழக்கு லடாக். இங்கு சீனா ஊடுருவினால், எளிதாக இந்திய எல்லைக்குள் காலை வைக்கலாம் என்பது கணக்கு. இருநாடுகளுக்கும் இடைப்பட்ட பாதுக்காக்கப்பட்ட இந்த இடத்தில் ரோந்து மட்டுமே வர வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கும் நிலையில் சீனா அடிக்கடி மீறி வருவது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 29-30 ஆகிய தேதிகளில் சீனா இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதிக்குள் நுழைய முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் உடனடியாக தடுத்து நிறுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பாங்காங் டிசோ வழியில் 135 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்கிறது. இதில் 45 கி. மீட்டர் தொலைவு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பிங்கர் 4 எனப்படும் இடத்தில் சீனா ஊடுருவ முயற்சித்துள்ளது. இங்கு இந்திய ராணுவத்தினர் நடந்து சென்று ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், சீன ராணுவம் இந்தப் பகுதியில் ராணுவத் தளவாடங்கள் கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாங்காங் டிசோ பகுதியில் இருக்கும் இந்தியப் பகுதியை ஆக்ரமிக்க சீன ராணுவம் முயற்சித்து வருவதாக இந்திய ராணுவம் இன்று வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்திய சீன எல்லைப் பகுதியில் முன்பு ஊடுருவ முயற்சித்த இடத்தில் மீண்டும் ஊடுருவுவதற்கு சீன ராணுவம் முயற்சித்தது. இதுகுறித்து கடந்த முறை இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் இதுவரை இருந்த நிலையை மீறுவதற்கு சீனா முயற்சிக்கிறது. இந்த இடத்தில் சீன ராணுவத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் ரோந்து சென்று கொண்டு இருந்தனர். இந்தப் பகுதியில் உடனடியாக கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இடத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுசுல் என்ற இடத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்திய ராணுவம் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை பேணுவதில் உறுதியாக உள்ளது, அதேசமயம், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications