அமெரிக்காவுக்கு '911' போன்று இந்தியாவுக்கு '112': விரைவில் அறிமுகம்
டெல்லி: அவசர நேரத்தில் உதவி கோருபவர்கள் எப்படி அமெரிக்காவில் 911 என்ற எண் இருக்கிறதோ அதே போன்று இந்தியாவில் 112 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த வாரம் ராஜஸ்தானில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியின் பென்ஸ் காரும், ஆல்டோ காரும் மோதியது. இதில் ஆல்டோ காரில் இருந்த 4 வயது சிறுமி பலியானார். விபத்து நடந்த உடன் உள்ளூர் டாக்டர் ஹேமமாலினியை மட்டும் தனது காரில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர்கள் சிறுமியை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை.
உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் தான் சிறுமி பலியானார். விபத்துகள் ஏற்படும்போது அவசர உதவிக்கு மாநிலத்திற்கு ஒரு எண் இருப்பதால் மக்கள் குழம்பிவிடுகிறார்கள். இந்நிலையில் தான் தேசிய அளவில் அவசரகால உதவிக்கு என்று 112 என்ற ஒரே ஏண்ணை அறிமுகப்படுத்த உள்ளது அரசு.
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். அதில் பலர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் பலியாகின்றனர். அவசர காலத்தில் உதவுவது பற்றி உள்துறை அமைச்சகம் 5 ஆண்டு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்புத் துறை அதிகாரி சஞ்சய் பன்சால் கூறுகையில்,
இந்தியாவின் புதிய அவசர ஹாட்லைன் எண்ணான 112-ல் காவல்துறை(100), தீயணைப்புத்துறை(102), ஆம்புலன்ஸ்(103) மற்றும் அவசர பேரிடர் மேலாண்மை(108) ஆகியவற்றின் எண்களும் சேர்க்கப்படும். போகப் போக அனைத்து அவசர உதவி எண்களும் 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
5 ஆண்டு காலத்தில் 112 எண் மூலம் தினமும் 10 லட்சம் கால்கள் எடுக்கப்படும். இந்த திட்டத்தில் 13 மொழிகள் சேர்க்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications