உலகிலேயே இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் சந்தோசமாக உள்ளனர்.. ஆர்எஸ்எஸ் தலைவர் சொன்ன திடுக் காரணம்!
உலகிலேயே இஸ்லாமியர்கள் சந்தோசமாக இருக்கும் நாடு இந்தியாதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்: உலகிலேயே இஸ்லாமியர்கள் சந்தோசமாக இருக்கும் நாடு இந்தியாதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கடந்த விஜயதசமி அன்று இந்தியா குறித்து பேசியதும், இந்தியாவில் இந்து மதம் எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பேசியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று ஒடிசாவில் ஆர்எஸ்எஸ் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

என்ன சொன்னார்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது பேச்சில், உலகிலேயே இஸ்லாமியர்கள் சந்தோசமாக இருக்கும் நாடு இந்தியாதான். அதற்கு காரணம் இந்து கலாச்சாரம். இந்து என்பது மதம் கிடையாது.

ஏன் இல்லை
ஆம் இந்து என்பதை ஒரு மதமாக குறிப்பிட முடியாது. அது மொழி, மற்றும் நாட்டிற்கு சொந்தமானது கிடையாது. இந்தியாவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையாகும் அது. இந்தியாவில் இருக்கும் எல்லோரும் இந்த கலாச்சாரத்திற்கு சொந்தமானவர்கள்.

உலகம்
உலகில் எந்த நாடு நீதிகளில் இருந்து வழி தவறினாலும் அவர்கள் முதலில் நாடுவது இந்தியாவைத்தான். அவர்கள் இந்தியாவிற்குத்தான் உண்மையை தேடி வருகிறார்கள். யூதர்கள் இடம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது அவர்களுக்கு இடமளித்தது இந்தியாதான்.

யார் எல்லாம் வருகிறார்கள்
அதேபோல் பார்சி மக்கள் நாடு இல்லாமல் இருந்த போது அவர்கள் எளிதாக இந்தியாவில் தங்கள் மதத்தை பின்பற்றினார்கள். அதேபோல்தான் உலகிலேயே மகிழ்ச்சியான இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

காரணமும் என்ன
இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? நாம் இந்துக்கள் என்பதுதான் இதற்கெல்லாம் காரணம். இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் பலர் தாங்கள் இந்துக்கள் என்பதை சொல்லிக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். சிலர் தாங்கள் இந்துக்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.

மதம்
அதே சமயம் சிலர் தங்களை இந்துக்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் இந்த கலாச்சாரத்தை பின்பற்ற மாட்டார்கள். சிலர் மட்டும்தான் தீவிரமாக தங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் பின்பற்றி வருகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications