டிரம்ப் எப்படி உள்ளே வந்தார்? இந்தியா, பாக் போர் நிறுத்தம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சூழலில் கோழைத்தனமாக இந்திய எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும் துருக்கி நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

எனினும் இந்தியாவிடம் உள்ள அதிநவீன வான் வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் இருப்பதால் அனைத்து குண்டுகளும் வானிலே இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் உள்ள ராணுவ விமான தளங்களை அழித்தது.
இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோ தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ், "இந்த போர் நிறுத்தமானது இரு நாட்டுக்கும் மிகவும் நல்ல விஷயம்.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் என்ன செய்தார் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்திற்குள் டிரம்ப் எவ்வாறு வந்தார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை."
"எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுத்து வந்தோம். அதே சமயம் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எப்போதும் போல் துணை நிற்கின்றோம்.எனினும் அமைதி தான் சிறந்த வழி" என்று ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications