இந்தியா- பாக். வெளியுறவுத் துறை செயலர்கள் இடையே இஸ்லாமாபாத்தில் ஜன.15-ல் பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ஜனவரி 15-ந் தேதியன்று பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட சார்க் அமைப்புகளின் தலைவர்களை அழைத்திருந்தார். இதன் பின்னர் அண்டை நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார்.

அதே நேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் முன்னெப்போதையும் விட உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தது. இதனால் இருநாடுகளிடையேயான நட்புறவில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சர்வதேச மாநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பதை மட்டுமின்றி நேருக்கு நேர் பார்ப்பதையே கூட பிரதமர் மோடி தவிர்த்து வந்தார்.
இதன் பின்னர் அண்மையில் பாரீஸில் நடைபெற்ற புவிவெப்பமடைதல் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ரஷ்யா, ஆப்கான் சென்றிருருந்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் செல்வதாக அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த அதிரடி பயண அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லாகூர் சென்ற பிரதமர் மோடிக்கு நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப் பிறந்த நாள் மற்றும் பேத்தியின் திருமணம் ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்றுவிட்டு நாடு திரும்பினார்.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஜனவரி 15-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாப்பூர்வ அறிவுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications