நாட்டின் 69வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
நாட்டின் 69வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
டெல்லி: நாட்டின் 69வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 69வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு
தலைநகர் டெல்லி ராஜபாதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.

10 நாட்டு தலைவர்கள்
வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இந்த ஆண்டு, ‘ஆசியான்' உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதுவே முதல்முறை
விழாவில் பங்கேற்ற அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இந்திய குடியரசுத் தினவிழாவில் ஆசியான் தலைவர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

பல அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின அணிவகுப்பையும், 10 நாட்டு தலைவர்களின் வருகையையும் முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

14,000 போலீசார்
இவர்களில் கருப்புப்பூனை படை வீரர்களும் அடங்குவர். அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை, இந்தியா கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு வரவேற்பு
இந்நிலையில் டெல்லி ராஜபாதையில் தேசிய கொடி ஏற்ற வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

கொடியேற்றினார் ஜனாதிபதி
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றினார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவரான பின்னர் கொடியேற்றுவது இதுவே முதல்முறை. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆசியான் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications