Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

106 வயது.. 1951 டூ 2022 இமாச்சல் தேர்தல்! இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் - யார் இந்த நெகி?

Subscribe to Oneindia Tamil

சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரன் நெகி தன்னுடைய 106 வயதில் காலமானார்.

சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை மறக்க முடியாது.

தேசம் விடுதலை பெற்ற உற்சாகத்துடன் ஆங்கிலேயர்களின் தலையீடு இன்று நம் தாய் நாட்டை சேர்ந்தவர்களுக்காக, நம் நாட்டுக்காக முதல் வாக்கை பதிவு செய்கிறோம் என்ற உணர்வு எல்லோருக்கும் மேலோங்கி இருந்த காலம் அது.

 ஷ்யாம் சரன் நெகி

ஷ்யாம் சரன் நெகி

சுதந்திர இந்தியாவின் அந்த முதல் தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்தவர் ஒரு 35 வயது இளைஞர். இமாச்சல பிரதேச மாநிலம் கல்பாவை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஷ்யாம் சரன் நெகி. தற்போது அவருக்கு வயது 106. இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்து இருக்கும் நெகி, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் தபால் வாக்கை பதிவு செய்தார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதனை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது பாராட்டத்தக்க செயல் என்றும், இது இளம் வாக்காளர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் எனவும் அவரை வாழ்த்தி இருந்தார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்று டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 நெகி மரணம்

நெகி மரணம்

இந்த நிலையில், தான் அளித்த வாக்கின் முடிவை அறிந்துகொள்வதற்குள் நெகி காலமாகிவிட்டார். நெகியின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். நாட்டின் முதல் வாக்காளர் கடைசி வாக்கை செலுத்துவது உணர்வுப்பூர்வமானது என்று அவர் கூறி இருக்கிறார்.

 அரசு மரியாதை

அரசு மரியாதை

ஷ்யாம் சரன் நெகியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் கின்னூர் உதவி காவல் ஆணையர் அமந்தீப் கார்க் தெரிவித்து உள்ளார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி மணீஷ் கார்க் வெளியிட்ட இரங்கலில், "ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த ஷ்யாம் சரன் நெகி பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியவர்." என்றார்.

ஆசிரியர்

ஆசிரியர்

கடந்த 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இமாச்சல பிரதேசம் கின்னூரில் உள்ள பழங்குடியின பகுதியில் பிறந்த ஷ்யாம் சரன் நெகி மாஸ்டர் நெகி என்றே அழைக்கப்படுகிறார். ஆசிரியரான இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் ஆனதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய பின்னணி இருக்கிறது.

 வானிலையால் கிடைத்த வாய்ப்பு

வானிலையால் கிடைத்த வாய்ப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் கடந்த 1952 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. ஆனால், அந்த காலத்தில் இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் மோசமான வானிலை நிலவும். இதனால் அப்பகுதி மக்களின் வசதிக்காக சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக கடந்த 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் முதல் வாக்கை பதிவு செய்தவர்தான் நெகி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+