இந்திய- பாக் பேச்சு.. தேதி இன்னும் முடிவாகவில்லை- மத்திய அரசு
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதுதொடர்பாக இந்திய வெளியவுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வியாழக்கிழமை விளக்கமளித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையே வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை எந்தத் தேதியில் நடத்துவது? என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின்போது பதான்கோட் தாக்குதல் விவகாரத்தை இந்தியா நிச்சயம் எழுப்பும். பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications