டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்: இந்திராணிக்கு சிறையில் விஷம் அளிக்கப்பட்டதா?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு சிறையில் யாரும் விஷம் அளித்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணியின் உடல்நலம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மோசமானது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரின் ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அதில் எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மருந்துகள்
இந்திராணி சிறையில் தனக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளை சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் அவற்றை விழுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் தற்கொலை செய்ய சிறை அதிகாரிகள் யாரும் உதவியிருக்க மாட்டார்கள்.

சஸ்பெண்ட்
இந்திராணி தற்கொலை செய்ய சிறை அதிகாரி யாராவது உதவி செய்தது தெரிய வந்தால் அவரை சஸ்பெண்ட் செய்ய தயங்க மாட்டோம்.

விஷம்
இந்திராணிக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா என்று விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இந்திராணியை தொடர்பு கொள்ளும் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

மருத்துவர்
சிறையில் மருத்துவர் ஒருவர் உள்ளார். அவர் கைதிகளுக்கு மருந்துகளை அளிக்கையில் அவற்றை அங்கேயே அவர் கண்முன்பு உட்கொள்ள வைப்பார். அதனால் இந்திராணி மாத்திரைகளை சேகரித்து வைத்து மொத்தமாக உட்கொள்ள வாய்ப்பே இல்லை என்றார் அந்த அதிகாரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications