சோட்டா ராஜன் "டூப்"போடு டெல்லி வந்திறங்கிய சிபிஐ!
டெல்லி: சோட்டா ராஜன் உயிருக்கு தாவூத் இப்ராகிம் கும்பலால் ஆபத்து இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, அவரைப் போன்ற உருவத்துடன் கூடிய நபரையும் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வந்துள்ளது சிபிஐ குழு.
அக்டோபர் 25ம் தேதி பாலி தீவில் வைத்து இந்தோனேசியா போலீஸாரால் கைது செய்யப்பட்டார் சோட்டா ராஜன். அவரை இன்று சிபிஐ குழுவினர் பாலியிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

அதிகா்லையில் அவரை டெல்லிக்கு கொண்டு வந்த சிபிஐ குழுவினர் அவரது உயிரைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அதில் ஒன்றுதான் சோட்டா ராஜன் போன்ற ஒருவரை கூடவே அழைத்து வந்து அனைவரையும் ஏமாற்றி சோட்டா ராஜனை பத்திரமாக அழைத்துச் சென்றது.
சோட்டா ராஜனைப் போலவே இரண்டு பேரை நியமித்து அவர்களை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்க வைத்து அனைவரையும் குழப்பியுள்ளனர் சிபிஐ குழுவினர். இவர்களுக்கும், சோட்டா ராஜனுக்குத் தரப்படுவதைப் போலவே கமாண்டோப் படைப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதன் மூலம் சோட்டா ராஜனைக் குறி வைக்கும் கும்பல்களுக்குக் குழப்பம் ஏற்படலாம் என்பதே சிபிஐயின் கணிப்பாகும்.
தாவூத் கும்பலால் மட்டுமல்லாமல், சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த சிலராலும் கூட அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சிபிஐ கருதுகிறது. எனவே அவரது உயிருக்கு பலமுனைகளிலிருந்தும் ஆபத்து இருப்பதாக சிபிஐ கணித்துள்ளது.
மும்பை போலீஸாரிலும் கூட பலர் சோட்டா ராஜன் கைதால் அதிருப்தியடைந்து அவரைப் போட்டுத் தள்ள முயலலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளும் கூட சோட்டா ராஜன் தங்களைப் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் கொல்ல முயற்சிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications