இந்திய ராணுவ அதிகாரி, மனைவி, மகன் படு கொலை - பின்னணியில் சீனா?
இம்பால்: மணிப்பூரில் அஸ்ஸாம் ரைபில்ஸ் படை பிரிவின் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் சீனாவுக்கு தொடர்பிருக்கலாம் என்கின்றன உளவு தகவல்கள்.
Recommended Video
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோருகிற, தனி மாநிலம் கோருகிற ஆயுதம் தாங்கிய குழுக்கள் இன்றளவும் ஆக்டிவ்வாக செயல்படுகின்றன. இந்த தீவிரவாத குழுக்களுக்கான ஆயுதங்கள் பெரும்பாலும் சீனாவிடம் இருந்தே கிடைத்து வருகின்றன.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் சீனாவில் பயிற்சி பெற்றவைதான். சீனாவில் பயிற்சி பெற்று, சீனாவின் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு மியான்மர் எனப்படுகிற பர்மா மற்றும் வங்கதேச எல்லைகளில் முகாம் அமைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதுதான் இந்த அமைப்புகளின் ஸ்டைல்.

மணிப்பூர் தாக்குதலில் 7 பேர் படுகொலை
இந்த பின்னணியில்தான் மணிப்பூரில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதலையும் உளவுத்துறை அதிகாரிகள் அணுகுகின்றனர். மணிப்பூர்-மியான்மர் எல்லையில்தான் அஸ்ஸாம் ரைபில்ஸ் படை பிரிவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அஸ்ஸாம் ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் விப்லாப் திரிபாதி, அவரது மனைவி, மகன், மேலும் 4 வீரர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

சீனாதான் பின்னணி?
இந்த தாக்குதலுக்கு மணிப்பூர் மக்கள் விடுதலை ராணுவம்- பி.எல்.ஏ மற்றும் மணிப்பூர் நாகா மக்கள் முன்னணி ஆகியவை பொறுப்பேற்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. மியான்மர் எல்லையில் உள்ள முகாம்களில் சீனாதான் இந்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கக் கூடும் என்பது உளவுத்துறையின் கருத்து. அண்மையில் மணிப்பூர் எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உளவுத்துறை கண்காணித்த போது சில வீடியோ பதிவுகள் இதற்கு ஆதாரமாக காட்டப்படுகின்றன. அதாவது அந்த வீடியோ பதிவுகளில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், பயங்கரவாதிகளின் முகாம்களில் இருப்பது பதிவாகி இருக்கிறது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.

சீனா-மியான்மரின் சதி?
பொதுவாக சீனா, இந்தியா மீது குற்றம்சாட்டுவது வழக்கம். திபெத் மற்றும் தைவானில் சீனா எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது என்பது சீனாவின் கருத்து. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் சீனா தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மேலும் சீனாவைப் போல மியான்மரும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என்கிற சந்தேகமும் உளவுத்துறையால் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக மியான்மரின் Ur Taga பிராந்தியத்தில் வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.

மியான்மர் மீது மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்?
2016-ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அதேபோல் மியான்மர் எல்லைக்குள் நுழைந்தும் மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தது. தற்போது வடகிழக்கு பயங்கரவாதிகளின் பின்னணியில் மியான்மர் இருப்பது உறுதியானால் மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்கின்றனர் மூத்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications