For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் அடுத்த 'சர்ஜிக்கல் அட்டாக்' வங்கி லாக்கர்கள்?

By Karthikeyan
Google Oneindia Tamil News

கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் அனைவரையும் அதிர வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்த அதிரடிக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோடி அதிரடி

மோடி அதிரடி

ஒரே இரவில் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இது முதல் கட்டம் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பேங்க் லாக்கர்

பேங்க் லாக்கர்

நம் வீட்டு பீரோக்களை விட ஆயிரம் மடங்கு பாதுகாப்பானவை வங்கி லாக்கர்கள். தீயாலோ, தண்ணீராலோ பாதிக்கப்படாத அளவுக்கு கனமான உலோகத்தால் அவை செய்யப்படுகின்றன. இந்த லாக்கர் பெறுவதற்கான முதல் தகுதி, அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இருந்தாலும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவராகவும் இருக்கவேண்டும்.

மூன்று சாவிகள்

மூன்று சாவிகள்

ஒவ்வொரு லாக்கருக்கும் மூன்று சாவிகள் இருக்கும் அதை கொண்டு மட்டும்தான் இந்தப் பெட்டகங்களைத் திறக்க முடியும். முதல் சாவியை மாஸ்டர் கீ என்பார்கள். இந்த சாவி வங்கியின் வசமே இருக்கும். அடுத்த இரண்டு சாவிகளும் வாடிக்கையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். தங்கள் லாக்கரில் பொருட்களை வைக்கவோ எடுக்கவோ வாடிக்கையாளர்கள் வரும்போது, வங்கி அதிகாரிகள் மாஸ்டர் கீயோடு வந்து முதல் லாக்கை திறந்துவிடுவார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களை வைக்கக் கூடாது.

600 கிராமுக்கு மேல் நகை இருந்தால் வரி

600 கிராமுக்கு மேல் நகை இருந்தால் வரி

இந்த நிலையில் வாட்ஸ் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த தகவல் படி, 600 கிராமுக்கு மேல் வங்கி லாக்கரில் வைக்கப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு கண்டிப்பாக ஆவணங்களை காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மதிப்பீட்டின் படி 3 மடங்கு வரி செலுத்த வேண்டுமாம். . அதுவும் அரசு வருவாய் துறை அதிகாரிகள் முன்பு தான் லாக்கர் திறக்கப்படுமாம். மேலும், வங்கி லாக்கர்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறதாம். இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வைராலாகி வருகிறது.

English summary
A message on WhatsApp read, " Advance notice on one more Modi Surigical Strike." This message goes on to talk about what
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X