சென்னை, டெல்லி, மும்பை ரயில் நிலையங்களை தகர்ப்போம்... ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று தீவிரவாதிகள் மிரட்டல் வீடுத்துள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து ரயில்வே துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் பதற்றம் நிலவுகிறது.
மின்னஞ்சல் மூலம் வந்த தகவலின்படி, ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் உள்துறை அமைச்சகம் மற்றும்,மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பரபரப்பு அடைந்துள்ளனர்.எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில்,பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் இந்த தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .
எனவே இந்தியா முழுக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அந்தந்த மாநில போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications