சூரியனை சந்திக்க போகும் ஆதித்யா எல்-1 விண்கலம்.. என்ன செய்யும்? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
Subscribe to Oneindia Tamil
ஶ்ரீஹரிகோட்டா: சூரியனை கண்காணிப்பு ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட உள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதித்யா எல்-1 அடிப்படை தகவல்கள் சில..

- சூரியன் குறித்த ஆய்வுக்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு இந்தியா
- சூரியன், பூமி இடையேயான மையமான லெக்ராஞ்சியன் புள்ளி 1 -ஐ சுற்றிய ஒளிவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1 செலுத்தப்படும். 4 மாதங்கள் பயணத்துக்குப் பின்னர் சுற்றுவட்டப் பாதையில் நுழையும்.
- சூரியனைப் பற்றிய ஆய்வில் லெக்ரேஞ்சியன் புள்ளிகள் மிக முக்கியமானவை. ஆதித்யா எல்-1 ஒன்றரை கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- ஆதித்யா எல்-1 சூரியனை பற்றிய தகவல்களைத் திரட்டி, சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும்
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ். இதனில் இருந்து சூரியனை சுற்றிய மேற்பரப்பு கரோனா எனப்படும். சூரிய கிரகணங்களின் போது வெறும் கண்ணாலே கூட இதைப் பார்க்கலாம். இதனைக் கண்காணிக்க பல ஆய்வு கலங்கள் அனுப்பியும் வைக்கப்பட்டிருக்கின்றன.
- சூரிய புயல்கள் என்பவை அணுக்கரு இணைவுகள் மூலம் வெடிப்பு ஏற்பட்டு உருவாகின்றன. இப்படி பூமியை நோக்கி வரக் கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே அறிய ஆதித்யா எல்-1 ஆய்வு உதவும். பொதுவாக வளிமண்டலம், காந்தப்புலம் பூமியை சூரிய புயலில் இருந்து பாதுகாக்கிறது. சூரிய புயல்கள் தாக்கினால் வானில் வலம் வரும் செயற்கைக் கோள்கள், விண்வெளி வீரர்கள் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடும். ஆகையால் ஆதியா எல்-1 ஆய்வு முதன்மையானதாகும்.
- ஆதித்யா எல்-1 ல் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4 சூரியனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
- நாசா பார்க்கர் சூரியன் ஆய்வுக் கலத்தை 2018-ல் அனுப்பியது. இது 16 முறை சூரியனை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. சூரியன் மேற்பரப்பு கரோனா குறித்து பார்க்கர்தான் அதிகமான தகவல்களை அனுப்பி இருக்கிறது.
- விண்வெளி வானிலை என்பது சூரியக்காற்று மற்றும் பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியின் நிலையைக் குறிக்கும். பல்வேறு தொழில்நுட்ப அமைப்பு முறைகளின் செயல்திறனில் இந்த வானிலை நிலவரம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். நமது செயற்கைக்கோள்களைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், சூரிய வளி மண்டலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் எவ்வாறு விண்வெளி வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
- "சூரியனை ஆழமாக ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விரைவில் 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. அதைத் தொடர்ந்து, வீனஸும் இஸ்ரோவின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம், நாடு தனது முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. வானம் எல்லை இல்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது"- சந்திரயான் 3 விண்கல வெற்றியின் போது பிரதமர் மோடி பேச்சு.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications